ஐசிசியின் வருடாந்த தரவரிசையில் இலங்கைக்கு பாரிய வீழ்ச்சி

374

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (02) வெளியிட்டுள்ள கிரிக்கெட் அணிகளுக்கான வருடாந்த தரவரிசை பட்டியலில், இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் என்றுமில்லாத வீழ்ச்சியுடன் 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ……….

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடத்தின் மே மாத முதல் பகுதியில் அணிகளுக்கான வருடாந்த தரவரிசையை வெளியிட்டு வருகின்றது. இதன்படி,  2018/2019 பருவகாலத்துக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள தரவரிசையின் அடிப்படையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இடங்களை பிடித்துள்ளதுடன், இலங்கை அணி பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில், ஒருநாள் போட்டிகளுக்கான வருடாந்த தரவரிசையில் இலங்கை அணி அடைந்துள்ள மோசமான பின்னடைவாக இது மாறியுள்ளது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட வருடாந்த ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணி 77 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்திருந்தது. எனினும், இம்முறை இலங்கை அணியை பின்தள்ளி, மேற்கிந்திய தீவுகள் அணி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி இவ்வருடம் ஒரு புள்ளியை இழந்து 76 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் பின்னடைவை சந்தித்திருக்கும் இலங்கை அணி, டெஸ்ட் தரவரிசையில் எவ்வித முன்னேற்றத்தை காணாத போதும், பின்னடைவுகளை சந்திக்கமால் 6வது இடத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துள்ளது. இறுதியாக, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வெற்றிபெற்று முன்னேறிய இலங்கை அணி, இம்முறை 94 (+1) புள்ளிகளுடன் 6வது இடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள வருடாந்த டெஸ்ட் அணிகள் தரவரிசையை முழுமையாக பார்க்கும் போது, கடந்த வருடம் முதலிடத்திருந்த இந்திய அணி, தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.  எனினும், 2வது இடத்திலிந்த தென்னாபிரிக்க அணி 3வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், நியூசிலாந்து அணி 4வது இடத்திலிருந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேநேரம், மூன்றாவது இடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணி 5வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து அணி 5வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 6வது மற்றும் 7வது இடங்களை தக்கவைத்துள்ளதுடன், 8வது இடத்துக்கு மேற்கிந்திய தீவுகள் முன்னேறி, பங்களாதேஷ் அணியை 9வது இடத்துக்கு பின்தள்ளியுள்ளது. இறுதியாக 10வது இடத்தை ஜிம்பாப்வே அணி பிடித்துள்ளது.

MCC இன் தலைவராக குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மேர்லிபோன் …….

அதேநேரம், இந்த பருவகாலத்துக்கான ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. முறையே இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் முதல் 7 இடங்களை பிடித்துள்ளன. எனினும், மேற்கிந்திய தீவுகள் அணி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், 9வது இடத்துக்கு இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பபுவா நியூகினியா ஆகிய நாடுகள் முறையே 10 தொடக்கம் 16 இடங்களை பிடித்துள்ளன. அதேவேளை, புதிதாக ஐக்கிய அமெரிக்கா, நம்பீபியா, நெதர்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தினை பெற்றுள்ள போதும், போதியளவு போட்டிகளில் விளையாடாத காரணத்தால், தரவரிசையில் அணிகள் இணைக்கப்படவில்லை.

இதேவேளை, T20I போட்டிகளுக்கான வருடாந்த தவரிசைப்பட்டியல் நாளைய தினம் (03) வெளியிடப்படும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில், 2015-16 பருவகாலத்துக்கான தொடர்களின் முடிவுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், 2016-17 மற்றும் 2017-18 பருவாலங்களில் இடம்பெற்ற தொடர்களின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் 50 சதவீத செல்வாக்கினை செலுத்துகின்றன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<