பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தவ்ஹித் ரிதோயிற்கு, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மூலம் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.
>>நுவான் துஷாரவின் ஹெட்ரிக்குடன் இலங்கைக்கு தொடர் வெற்றி<<
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையே கடந்த சனிக்கிழமை (09) நடைபெற்ற T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் தவ்ஹித் ரிதோய், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழக்க தனது ஆட்டமிழப்பிற்கு பின்னர் மைதானத்தில் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிகழ்வானது பின்னர் மைதான நடுவர்களின் இடையூறுக்கு அமைய சுமூகம் செய்யப்பட்டு அவர் ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். எனினும் குறிப்பிட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ரிதோயிற்கு ICC மூலம் போட்டிக்கட்டணத்தில் 15% அபாரதமாக விதிக்கப்பட்டிருப்பதோடு, 23 வயது நிரம்பிய அவருக்கு நன்னடத்தை விதி மீறல் புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது.
தவ்ஹித் ரிதோய் தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களையும், போட்டிக்கட்டணத்தில் 15% இணை அபாரதமாக செலுத்தவும் ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதேவேளை பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை 2-1 என கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<