Home Tamil 2023 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

2023 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

825

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றி 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பதிவு செய்த முதல் வெற்றியாகவும் அமைகின்றது.

>> உபாதை காரணமாக வெளியேறும் ஹர்திக் பாண்டியா

லக்னோவ் அரங்கில் முன்னதாக ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கசுன் ராஜித, துஷான் ஹேமன்த ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க லஹிரு குமார மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க

நெதர்லாந்து பதினொருவர்

விக்ரமஜித் சிங், மெக்ஸ் ஒடோவ்ட், கொலின் அக்கர்மன், பாஸ் டீ லீடே, சைபிரான்ட் என்கல்பிரட்ச், டேஜா நிடாமனுரு, ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), லோகன் வான் பீக், ரியோலோப் வான் டி மெர்வே, ஆர்யன் தட், போல் வான் மீக்ரேன்

இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் இருந்தே கசுன் ராஜிதவின் வேகத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியது. அணியின் முன்வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பியதோடு டில்சான் மதுசங்கவின் வேகத்திற்கு தடுமாறி இணைப்பாட்டங்களை உருவாக்கவும் தடுமாறினர். இதனால் ஒரு கட்டத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் மிகப் பொறுமையான முறையில் நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டத்தினை சைபிரான்ட் என்கல்பிரட்ச் மற்றும் லோகன் வான் பீக் ஜோடி உருவாக்கியது. அதன்படி இரண்டு வீரர்களும் 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு நெதர்லாந்து கிரிக்கெட் அணியானது 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 262 ஓட்டங்கள் எடுத்தது.

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சைபிரான்ட் என்கல்பிரட்ச் தன்னுடைய கன்னி ஒருநாள் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் லோகன் வான் பீக் உம் தன்னுடைய கன்னி ஒருநாள் அரைச்சதத்தோடு 75 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 59 ஓட்டங்களை எடுத்திருந்தார். மேலும் இந்த இரண்டு வீரர்களும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் 7ஆம் விக்கெட்டுக்காக பதிவு செய்யப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்தனர்.

>>“தலைவர் பதவி என்னுடைய துடுப்பாட்டத்தை பாதிக்காது” – மெண்டிஸ்

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் டில்சான் மதுசங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மகீஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 263 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி தொடக்கத்தில் சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதும் பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம ஆகியோரது அபார துடுப்பாட்டங்களோடு இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த வீரர்களில் சதீர சமரவிக்ரம இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 7 பௌண்டரிகள் அடங்கலாக 107 பந்துகளில் 91 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் பெதும் நிஸ்ஸங்க இப்போட்டியில் அரைச்சதம் விளாசியதோடு 52 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இந்த அரைச்சதம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெதும் நிஸ்ஸங்கவின் ஹட்ரிக் அரைச்சதமாகியது. இவர்களோடு சரித் அசலன்க 44 ஓட்டங்கள் எடுத்து இலங்கைத் தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் ஆர்யன் தத் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் துடுப்பாட்டவீரரான சதீர சமரவிக்ரம தெரிவாகினார். இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக எதிர்வரும் வியாழக்கிழமை (06) இங்கிலாந்தினை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Netherland
262/10 (49.4)

Sri Lanka
263/5 (48.2)

Batsmen R B 4s 6s SR
Vikramjit Singh lbw b Kasun Rajitha 4 13 1 0 30.77
Max O’Dowd b Kasun Rajitha 16 27 1 1 59.26
Colin Ackermann c Kusal Mendis b Kasun Rajitha 29 31 5 0 93.55
Bas de Leede c Kusal Perera b Dilshan Madushanka 6 21 0 0 28.57
Teja Nidamanuru lbw b Dilshan Madushanka 9 16 0 0 56.25
Scott Edwards b Matheesha Pathirana 16 16 0 0 100.00
Sybrand Engelbrecht b Dilshan Madushanka 70 82 4 1 85.37
Logan van Beek c Charith Asalanka b Kasun Rajitha 59 75 1 1 78.67
Roelof van der Merwe c Kusal Mendis b Dilshan Madushanka 7 7 0 0 100.00
Aryan Dutt not out 9 6 1 0 150.00
Paul van Meekeren run out (Kusal Mendis) 4 5 0 0 80.00


Extras 33 (b 0 , lb 1 , nb 1, w 26, pen 5)
Total 262/10 (49.4 Overs, RR: 5.28)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 9.4 1 49 4 5.21
Kasun Rajitha 9 0 50 4 5.56
Chamika Karunaratne 9 1 58 0 6.44
Mahesh Theekshana 10 0 44 1 4.40
Dushan Hemantha 8 0 42 0 5.25
Dhananjaya de Silva 4 0 13 0 3.25


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Scott Edwards b Paul van Meekeren 54 52 9 0 103.85
Kusal Perera c Bas de Leede b Aryan Dutt 5 8 1 0 62.50
Kusal Mendis c Paul van Meekeren b Aryan Dutt 11 17 2 0 64.71
Sadeera Samarawickrama not out 91 107 7 0 85.05
Charith Asalanka b Aryan Dutt 44 66 2 1 66.67
Dhananjaya de Silva b Colin Ackermann 30 37 1 2 81.08
Dushan Hemantha not out 4 3 1 0 133.33


Extras 24 (b 13 , lb 0 , nb 0, w 11, pen 0)
Total 263/5 (48.2 Overs, RR: 5.44)
Bowling O M R W Econ
Aryan Dutt 10 0 44 3 4.40
Logan van Beek 10 0 57 0 5.70
Paul van Meekeren 8 1 39 1 4.88
Bas de Leede 3 0 29 0 9.67
Roelof van der Merwe 9 0 42 0 4.67
Colin Ackermann 8.2 0 39 1 4.76



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<