மகளிர் T20 உலகக் கிண்ணம் நடைபெறும் புதிய இடம் அறிவிப்பு

5
BANGLADESH CRICKET

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடமாக ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

>>முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அறிவிப்பு!<<

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண நிலைமைகள் குறிப்பிட்ட தொடர் அங்கே நடைபெறுவதில் சிக்கல்களை தோற்றுவித்திருந்தது. 

எனவே குறிப்பிட்ட மகளிர் T20 உலகக் கிண்ண தொடரினை வேறு நாடு ஒன்றில் நடாத்த ICC திட்டமிட்டு அதற்காக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்யமாகிய நாடுகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரினை இந்தியா நடாத்த அந்த நாட்டு கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் அது வெற்றிகரமாக நிறைவடையாது போனது. 

இதனை அடுத்து இலங்கை அல்லது இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளில் ஒன்றிலேயே T20 உலகக் கிண்ணம் நடைபெற அதிக சாத்தியப்பாடுகள் காணப்பட்டிருந்தன 

எனவே இதற்கு அமைவாகவே தற்போது ஐக்கிய அரபு இராச்சியம், மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

அதன்படி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கால இடைவெளியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<