இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 33 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்
அவுஸ்திரேலியாவில் 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டி தொடரின் மூன்றாவது பயிற்சிப் போட்டியாக இன்று (11) மெல்பர்ன் நகரின் MCG அரங்கில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் அபார ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய குசல் மெண்டிஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்திருக்க, வனிந்து ஹஸரங்க வெறும் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு சார்பில் பிரட் எவான்ஸ், சிக்கந்தர் ரஷா, வெஸ்லி மெதவ்வரே மற்றும் மில்டன் சும்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
இராணுவ அரை மரதனில் அசைக்க முடியாத வீரராக சண்முகேஸ்வரன்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 189 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக வெஸ்லி மெதவ்வரே 42 பந்துகளை எதிர்கொண்டு 3 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் எடுக்க, மில்டன் சும்பா 25 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் உடன் 32 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Craig Ervine b Brad Evans | 21 | 15 | 3 | 0 | 140.00 |
Kusal Mendis | c Richard Ngarava b Ryan Burl | 54 | 29 | 6 | 3 | 186.21 |
Dhananjaya de Silva | c Sean Williams b Sikandar Raza | 17 | 16 | 2 | 0 | 106.25 |
Dhanushka Gunathilake | c Craig Ervine b Milton Shumba | 17 | 18 | 1 | 0 | 94.44 |
Bhanuka Rajapaksa | c Clive Madande b Wesly Madhevere | 17 | 16 | 2 | 0 | 106.25 |
Dasun Shanaka | not out | 16 | 13 | 2 | 0 | 123.08 |
Wanidu Hasaranga | not out | 37 | 14 | 4 | 2 | 264.29 |
Extras | 9 (b 0 , lb 5 , nb 1, w 3, pen 0) |
Total | 188/5 (20 Overs, RR: 9.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tendai Chatara | 2 | 0 | 23 | 0 | 11.50 | |
Richard Ngarava | 2 | 0 | 22 | 0 | 11.00 | |
Blessing Muzarabani | 2 | 0 | 27 | 0 | 13.50 | |
Brad Evans | 2 | 0 | 18 | 1 | 9.00 | |
Wellington Masakadza | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Ryan Burl | 2 | 0 | 13 | 1 | 6.50 | |
Sikandar Raza | 2 | 0 | 8 | 1 | 4.00 | |
Sean Williams | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Wesly Madhevere | 1 | 0 | 8 | 1 | 8.00 | |
Milton Shumba | 1 | 0 | 7 | 1 | 7.00 | |
Luke Jongwe | 2 | 0 | 23 | 0 | 11.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Regis Chakabva | c Kusal Mendis b Chamika Karunaratne | 20 | 15 | 3 | 0 | 133.33 |
Craig Ervine | b Maheesh Theekshana | 23 | 15 | 3 | 0 | 153.33 |
Wesly Madhevere | -select- b | 43 | 42 | 3 | 0 | 102.38 |
Sean Williams | c Bhanuka Rajapaksa b Maheesh Theekshana | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Sikandar Raza | c Dhananjaya de Silva b Chamika Karunaratne | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Milton Shumba | b Maheesh Theekshana | 32 | 25 | 4 | 0 | 128.00 |
Ryan Burl | not out | 12 | 10 | 0 | 0 | 120.00 |
Tony Munyonga | not out | 12 | 7 | 1 | 0 | 171.43 |
Extras | 10 (b 1 , lb 1 , nb 0, w 8, pen 0) |
Total | 155/5 (20 Overs, RR: 7.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Maheesh Theekshana | 5 | 0 | 44 | 3 | 8.80 | |
Dushmantha Chameera | 4 | 0 | 36 | 0 | 9.00 | |
Chamika Karunaratne | 3 | 0 | 26 | 2 | 8.67 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 22 | 0 | 5.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<