இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் எதிர்பார்ப்பு மிக்க முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை 79 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> T20 உலகக் கிண்ணம்; கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ICC
முன்னதாக அவுஸ்திரேலியாவின் கீலோங் நகரில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தலைவர் சுண்டன்காபொயில் ரிஸ்வான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.
தொடரில் தமது முதல் போட்டியில் நமீபிய அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த இலங்கை அணி இப்போட்டிக்கான குழாத்தில் சரித் அசலன்கவினை இணைக்க தனுஷ்க குணத்திலக்கவுக்கு ஓய்வு வழங்கியிருக்கியிருந்தது.
இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான், மகீஷ் தீக்ஷன
ஐக்கிய அரபு இராச்சிய XI – சிராக் சூரி, முஹமட் வஸீம், காசிப் தாவூத், அரவிந்த், ஆர்யன் லக்ரா, பாசில் ஹமீட், சுண்டன்காபொயில் ரிஸ்வான் (தலைவர்), அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜூனைட் சித்திக், ஸஹூர் கான்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்த குசல் மெண்டிஸ் சிறந்த தொடக்கம் வழங்கியிருந்த போதும் அதனை நீண்ட துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஆக மாற்ற தவறியிருந்தார். இதனால் குசல் மெண்டிஸின் விக்கெட் ஆர்யன் லக்ராவின் பந்துவீச்சில் 13 பந்துகளுக்கு 18 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிபோனது.
மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் இணைந்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். 50 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. ரன் அவுட் மூலமாக ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 21 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலன்க மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் கார்த்திக் மெய்யப்பனின் அபார சுழலில் சிக்கி, அவரின் ஹட்ரிக் விக்கெட்டுக்களாக மாறினர். இதில் பானுக்க ராஜபக்ஷ 5 ஓட்டங்களுடன் ஏமாற்ற, சரித் அசலன்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர் ஓட்டமேதுமின்றி நடையைக் கட்டியிருந்தனர்.
பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த வனிந்து ஹஸரங்கவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் அரைச்சதம் கடந்து இலங்கை அணியை பெதும் நிஸ்ஸங்க பலப்படுத்தியதோடு அவரின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணி; போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 8ஆவது T20i அரைச்சதத்துடன் 60 பந்துகளை எதிர்கொண்டு 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் ஐக்கிய அரபு இராச்சிய அணி பந்துவீச்சு சார்பில் கார்த்திக் மெய்யப்பன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்ததோடு, ஐக்கிய அரபு இராச்சிய அணிக்காக T20 உலகக் கிண்ணத் தொடர் ஒன்றால் ஹட்ரிக் விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராகவும் சாதனை செய்தார். இதேநேரம் ஸகூர் கான் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 153 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் ப்ரமோத் மதுசான் ஆகியோரினை சமாளிக்க ஆரம்பத்திலேயே தடுமாற்றம் காட்டி தமது முன்வரிசை வீரர்களை பறிகொடுத்திருந்தது.
இதனை அடுத்து வனிந்து ஹஸரங்கவின் சுழலுக்கும் திணறிய ஐக்கிய அரபு இராச்சிய அணி துடுப்பாட்டவீரர்கள் இறுதியில் 17.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 73 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.
ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் கூட 20 ஓட்டங்களையேனும் கடக்காத நிலையில் அப்சல் கான் அதிகபட்சமாக 19 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய, மகீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இவர்களோடு அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் ப்ரமோத் மதுசன் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றியோடு சுபர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதியினை நெருங்கியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தமது அடுத்த மோதலில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து நெதர்லாந்து அணியினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Basil Hameed b Zahoor Khan | 74 | 60 | 6 | 2 | 123.33 |
Kusal Mendis | lbw b Aryan Lakra | 18 | 13 | 2 | 0 | 138.46 |
Dhananjaya de Silva | run out (Aayan Afzal Khan) | 33 | 21 | 2 | 1 | 157.14 |
Bhanuka Rajapaksa | c Kashif Daud b Karthik Meiyappan | 5 | 7 | 0 | 0 | 71.43 |
Charith Asalanka | c Vriitya Aravind b Karthik Meiyappan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dasun Shanaka | b Karthik Meiyappan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Wanidu Hasaranga | c Basil Hameed b Aayan Afzal Khan | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Chamika Karunaratne | c Kashif Daud b Zahoor Khan | 8 | 11 | 1 | 0 | 72.73 |
pramod madushan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Dushmantha Chameera | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 10 (b 0 , lb 4 , nb 0, w 6, pen 0) |
Total | 152/8 (20 Overs, RR: 7.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Junaid Siddique | 4 | 0 | 36 | 0 | 9.00 | |
Kashif Daud | 1 | 0 | 14 | 0 | 14.00 | |
Zahoor Khan | 4 | 0 | 26 | 2 | 6.50 | |
Aayan Afzal Khan | 3 | 0 | 16 | 1 | 5.33 | |
Aryan Lakra | 3 | 0 | 24 | 1 | 8.00 | |
Karthik Meiyappan | 4 | 0 | 19 | 3 | 4.75 | |
Basil Hameed | 1 | 0 | 13 | 0 | 13.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Muhammad Waseem | b Dushmantha Chameera | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Chirag Suri | b pramod madushan | 14 | 19 | 3 | 0 | 73.68 |
Aryan Lakra | b Dushmantha Chameera | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Chundangapoyil Rizwan | c Bhanuka Rajapaksa b Dushmantha Chameera | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Vriitya Aravind | lbw b Wanidu Hasaranga | 9 | 18 | 1 | 0 | 50.00 |
Basil Hameed | c Dhananjaya de Silva b Dasun Shanaka | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Aayan Afzal Khan | b Wanidu Hasaranga | 19 | 21 | 1 | 0 | 90.48 |
Kashif Daud | lbw b Wanidu Hasaranga | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Karthik Meiyappan | st Kusal Mendis b Maheesh Theekshana | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Junaid Siddique | c Pathum Nissanka b Maheesh Theekshana | 18 | 16 | 1 | 1 | 112.50 |
Zahoor Khan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 73/10 (17.1 Overs, RR: 4.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
pramod madushan | 3 | 0 | 14 | 1 | 4.67 | |
Maheesh Theekshana | 3.1 | 0 | 15 | 2 | 4.84 | |
Dushmantha Chameera | 3.5 | 0 | 15 | 3 | 4.29 | |
Chamika Karunaratne | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Wanidu Hasaranga | 4 | 1 | 8 | 3 | 2.00 | |
Dasun Shanaka | 1.1 | 0 | 7 | 1 | 6.36 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<