தீர்மானம் கொண்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வெற்றி நியூசிலாந்து அணிக்கு சுபர் 12 சுற்றில் கிடைத்த இரண்டாவது வெற்றியாக மாற, இலங்கை அணிக்கு அது இரண்டாவது தோல்வியாக அமைந்திருக்கின்றது. அத்துடன் இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து T20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதி செல்வதற்கான தமது வாய்ப்பினையும் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்துடன் (NRR) அதிகரித்திருக்கின்றது.
இலங்கைக்கு பதிலடி தரக் காத்திருக்கும் நியூசிலாந்து?
இன்று (29) சிட்னியில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி உபாதைக்குள்ளான பினுர பெர்னாண்டோவிற்குப் பதிலாக கசுன் ராஜிதவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்க, நியூசிலாந்து மார்க் சப்மனிற்குப் பதிலாக டெரைல் மிச்சலை இணைத்திருந்தது.
இலங்கை XI
தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித
நியூசிலாந்து XI
பி(f)ன் அலன், டெவோன் கொன்வெய், கேன் வில்லியம்சன் (தலைவர்), கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டெரைல் மிச்சல், மிச்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌத்தி, லோக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட்
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவில் முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே நெருக்கடி உருவாக்கினர். இதனால் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த பி(f)ன் அலன் மற்றும் டெவோன் கொன்வெய் ஆகியோர் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடக்க அதன் பின்னர் அடுத்ததாக கேன் வில்லியம்சனும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஆரம்பத்தில் 15 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் ஆடிய கிளன் பிலிப்ஸ் நிதானமாக நியூசிலாந்து அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களை டெரைல் மிச்சல் உடன் இணைந்து பகிர்ந்து அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார்.
இந்த நிலையில் நியூசிலாந்தின் நான்காம் விக்கெட்டாக வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டெரைல் மிச்சல் 22 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
எனினும் ஆட்டமிழக்காமல் இருந்த கிளன் பிலிப்ஸ் சதம் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் கிளன் பிலிப்ஸ் தன்னுடைய இரண்டாவது T20I சதத்தோடு 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 167 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாறியதோடு, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவர் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க ஏனையோர் ஏமாற்றம் வழங்கி மோசமாக ஆட்டமிழந்திருந்தனர்.
இதனால் 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி 102 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பானுக்க ராஜபக்ஷ 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுக்க, தசுன் ஷானக்க 32 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மிச்சல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக கிளன் பிலிப்ஸ் தெரிவானார். இலங்கை அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் அடுத்த போட்டி ஆப்கானிஸ்தான் அணியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (1) நடைபெற, நியூசிலாந்து தமது அடுத்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Finn Allen | b Maheesh Theekshana | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Devon Conway | b Dhananjaya de Silva | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Kane Williamson | c Kusal Mendis b Kasun Rajitha | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Glenn Phillips | c Dasun Shanaka b Lahiru Kumara | 104 | 64 | 10 | 4 | 162.50 |
Daryl Mitchell | b Wanidu Hasaranga | 22 | 24 | 0 | 0 | 91.67 |
James Neesham | c Dasun Shanaka b Kasun Rajitha | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Mitchell Santner | not out | 11 | 5 | 0 | 1 | 220.00 |
Ish Sodhi | run out (Ashen Bandara) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Tim Southee | not out | 4 | 1 | 1 | 0 | 400.00 |
Extras | 10 (b 0 , lb 2 , nb 3, w 5, pen 0) |
Total | 167/7 (20 Overs, RR: 8.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 35 | 1 | 8.75 | |
Kasun Rajitha | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 14 | 1 | 7.00 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Lahiru Kumara | 3 | 0 | 37 | 1 | 12.33 | |
Chamika Karunaratne | 3 | 0 | 34 | 0 | 11.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Tim Southee | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Kusal Mendis | c Devon Conway b Trent Boult | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Dhananjaya de Silva | b Trent Boult | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Charith Asalanka | c Finn Allen b Trent Boult | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Bhanuka Rajapaksa | c Kane Williamson b Lockie Ferguson | 34 | 22 | 3 | 2 | 154.55 |
Chamika Karunaratne | c Trent Boult b Mitchell Santner | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Dasun Shanaka | c Mitchell Santner b Trent Boult | 35 | 32 | 4 | 1 | 109.38 |
Wanidu Hasaranga | c Kane Williamson b Ish Sodhi | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Maheesh Theekshana | c James Neesham b Mitchell Santner | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | not out | 8 | 21 | 0 | 0 | 38.10 |
Lahiru Kumara | st Devon Conway b Ish Sodhi | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0) |
Total | 102/10 (19.2 Overs, RR: 5.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 4 | 1 | 12 | 1 | 3.00 | |
Trent Boult | 4 | 0 | 13 | 4 | 3.25 | |
Lockie Ferguson | 4 | 0 | 35 | 1 | 8.75 | |
Mitchell Santner | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Ish Sodhi | 3.2 | 0 | 21 | 2 | 6.56 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<