சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட மூன்று வீரர்களின் பெயர்ப்பட்டியலினையும் அறிவித்துள்ளது.
>>தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற டயலொக் TV<<
அதன்படி ஐ.சி.சி. சிறந்த வீரர்கள் பரிந்துரையில் இம்முறை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ரவூப், இந்திய அணியின் முன்னணி வீரர் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வீரர்களில் ஹரிஸ் ரவூப் கடந்த மாதம் பாகிஸ்தான் அணி சுமார் 22 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றினை கைப்பற்ற உதவி செய்திருந்ததோடு, ஜஸ்பிரிட் பும்ரா அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி பங்களிப்புச் செய்திருந்தார்.
மறுமுனையில் தென்னாபிரிக்க வீரரான மார்கோ ஜான்சென் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மற்றும் இந்திய அணியுடனான T20 தொடர் என்பவற்றில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காக நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த வீரர்களில் சிறந்த வீரரினை தெரிவு செய்வதற்கான வாக்குகளை https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month என்னும் இணையதள முகவரி ஊடாக கிரிக்கெட் இரசிகர்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.