சர்வதேச கிரிக்கெட் சபையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ், ஷெக் கிரவ்லே மற்றும் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஆஷஷ் தொடரில் மூன்று போட்டிகளில் மாத்திரம் 19 விக்கெட்டுகளை கிரிஸ் வோக்ஸ் வீழ்த்தியிருந்தார். இதில் ஒரு 5 விக்கெட் குவிப்பு மற்றும் ஒரு 4 விக்கெட் குவிப்பினையும் கைப்பற்றியிருந்தார். அதேநேரம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான 32 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
தொடரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்துடன், மொத்தமாக மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடி தொடர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.
கிரிஸ் வோக்ஸ் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவுசெய்யப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை அஷ்லிக் கார்ட்னர் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், மீண்டும் ஜூலை மாதமும் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டார். அதுமாத்திரமின்றி ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 தடவைகள் இந்த விருதை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<