இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்கும் ஐ.சி.சி

611

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) ஊழல்கள் தடுப்பு பிரிவின் (Anti-Corruption) பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், இலங்கை கிரிக்கெட்டிற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் பற்றி அறிக்கை ஒன்றினை இன்று புதன்கிழமை (03) வெளியிட்டுள்ளார்.

“ (ஊழல்கள் தொடர்பிலான) விசாரணைகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. ஆகையினால், இது தொடர்பில் மேலதிக விடயங்கள் எதனையும் இப்போது கூறுவது பொருத்தமில்லை என நினைக்கின்றேன். ஆனால், வேண்டுகோள் ஒன்றின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஆகியோருக்கு (ஊழல் விசாரணை தொடர்பில்) விரிவான விளக்கவுரை ஒன்றினை சமர்ப்பித்துள்ளோம். “ என ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவின்  பொது முகாமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

முத்தரப்பு தொடருக்காக இந்தியா செல்லும் இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி

இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்து கற்புலனற்றோர் அணிகளுக்கு இடையில்…

ஊழல்கள் தொடர்பான விசாரணை ஒரு புறமிருக்க, இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் இம்மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியோடு, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு போட்டி கொண்ட T20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் நவம்பர் 27ஆம் திகதி வரை விளையாடுகின்றது.

“ இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிர்வாக சபைக்கான தேர்தல்கள் இன்னும் நடைபெறாத நிலையில் நாங்கள் (ஊழல் விசாரணைகளுக்காக) இலங்கையின் கிரிக்கெட்டிற்கு பொறுப்பாக உள்ள உரிய அதிகாரிகளிடமிருந்து போதுமான ஆதரவை பெற்று  வருகின்றோம். “

“ (இதேநேரம்) ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த விசாரணைகள் முழுமையாக நிறைவடைய குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதனையும் அது இலங்கையில் ஆரம்பமாகவுள்ள (இலங்கை – இங்கிலாந்து) இருதரப்பு தொடர் பற்றியது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்துகின்றேன். “

“ எவ்வாறாயினும், வருகின்ற நாட்களில், நான் கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பம் மூலம் இரண்டு அணிகளும் ஊழலுடன் சம்பந்தமான நபர்கள்  பற்றி எச்சரிக்கையாக இருப்பதை உறுதி செய்வேன். என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<