104 நாடுகளுக்கு சர்வதேச T20 போட்டிகளுக்கான அந்தஸ்து

739
AFP

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.) தமது உறுப்புரிமையினைப் பெற்றிருக்கும் 104 நாடுகளுக்கும், T20 சர்வதேசப் போட்டிகளுக்கான அந்தஸ்தை வழங்கவிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் …..


இதன் அடிப்படையில், .சி.சி. இன் உறுப்புரிமையினைப் பெற்றுள்ள நாடுகளின்  ஆடவர் கிரிக்கெட் அணியும், மகளிர் கிரிக்கெட் அணியும் எதிர்காலத்தில் விளையாடும் T20 போட்டிகள் அனைத்தும் சர்வதேசப் போட்டிகளாகவே கருதப்படும்.

.சி.சி. இந்த விடயத்தினை இன்று (26) கொல்கத்தாவில் இடம்பெற்ற அவர்களது காலாண்டு பொதுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதோடு, .சி.சி. இன் மேலதிகாரிகளில் ஒருவரான டேவிட் றிச்சர்ட்சன், எல்லா நாடுகளும் சர்வதேச T20 போட்டிகளுக்கான அந்தஸ்தை பெற இருப்பதால் அனைத்து நாடுகளையும் இணைத்தவாறு எதிர்காலத்தில் T20 அணிகளின் தரவரிசையும் வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டினை உலகெங்கிலும் பிரபல்யமாக்கும் நோக்குடனேயே, குறைந்த ஓவர்கள் (20) கொண்ட இந்த வகைப் போட்டிகள் சர்வதேச போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது .சி.சி. இன் முழு உறுப்புரிமையினைப் பெற்ற 12 நாடுகளுக்கும், .சி.சி. இன் அங்கத்துவ நாடுகளான ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கோங், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குமே T20 சர்வதேசப் போட்டிகளின் அந்தஸ்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அறிமுகப்படுத்தவுள்ள புதுவகை கிரிக்கெட்

உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் பிரபலமாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், அதிகமான …..

எனவே, .சி.சி. இன் அங்கத்துவத்தினைப் பெற்றிருக்கும் நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் விளையாடும் T20 போட்டிகள் அனைத்தும் சர்வதேசப் போட்டிகள் என்பதோடு, ஆடவர் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் விளையாடும் T20 போட்டிகள் அனைத்தும் சர்வதேசப் போட்டிகளாக அமையும்.

மேலும், .சி.சி. இன் இந்த பொதுக்கூட்டத்தில் இனிவரும் காலங்களின் போது கிரிக்கெட் போட்டிகளில் பந்தினை சேதப்படுத்தும் வீரர்களுக்கும்,  கிரிக்கெட்டின் புனிதத் தன்மைக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக மோசமான நடத்தைகளை காட்டும் வீரர்களுக்கும் எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டில் இடம்பெறவிருந்த சம்பியன்ஸ் கிண்ணகிரிக்கெட் தொடருக்குப் பதிலாக, T20 உலகக் கிண்ணப்போட்டித் தொடரை நடாத்த முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.