இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுத் தொடரின் சுபர் சிக்ஸ் சுற்றுக்காக விளையாடிய போட்டியில் இலங்கை வீரர்கள் 8 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றனர்.
>>பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை தொடரில் எந்தப் போட்டிகளிலும் தோல்வியடையாத அணியாக ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) எதிர்கொள்கின்றது.
முன்னதாக ஹராரே நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்திருந்தார்.
>>உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான 10ஆவது அணியாக நெதர்லாந்து
இப்போட்டிக்கான இலங்கை குழாம் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. அந்தவகையில் ஒருநாள் போட்டிகளில் முதன் முறையாக துடுப்பாட்ட சகலதுறைவீரரான சஹான் ஆராச்சிகேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க, மணிக்கட்டு சுழல்வீரரான துஷான் ஹேமன்தவும் உள்வாங்கப்பட்டிருந்தார். அதேநேரம் இன்றைய போட்டியில் வனிந்து ஹஸரங்க, தனன்ஞய டி சில்வா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை குழாம்
பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமன்த, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, மதீஷ பத்திரன
மேற்கிந்திய தீவுகள் குழாம்
பிரண்டன் கிங், ஜோன்சன் சார்ள்ஸ், கீசி கார்டி, ஷேய் ஹோப் (தலைவர்), நிகோலஸ் பூரான், சாமர் புரூக்ஸ், ரொஸ்டன் சேஸ், கீமொ போல், கெவின் சின்கிளய்ர், ரொமாரியோ ஷெபார்ட், அகீல் ஹொசைன்
பின்னர் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது தொடக்கத்தில் இருந்தே தடுமாறத் தொடங்கியது. அணியின் முதல் மூன்று முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான பிரண்டன் கிங், ஜோன்சன் சார்ள்ஸ் மற்றும் சாமர் புரூக் ஆகிய மூன்று பேரும் மகீஷ் தீக்ஷனவின் சுழல் வேட்டைக்கு இரையாகினர். இதில் ஜோன்சன் சார்ள்ஸ் மாத்திரம் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய இருவரும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக பறிகொடுத்து சரிவு நிலைக்குச் சென்ற போதும் இலங்கை அணி விட்ட சில களத்தடுப்பு தவறுகளால் மத்திய வரிசையில் ஆடிய கீசி கார்டி பொறுமையாக ஆடி தனது தரப்பினை சரிவில் இருந்து மீட்டெடுக்க உதவியிருந்தார்.
தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த கீசி கார்டி தன்னுடைய கன்னி ஒருநாள் அரைச்சதத்துடன் 96 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 87 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன வெறும் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து திறமையான பந்துவீச்சினை வெளிப்படுத்த, துஷான் ஹேமன்த 02 விக்கெட்டுக்களையும் டில்சான் மதுசங்க, தசுன் ஷானக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 244 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி பெதும் நிஸ்ஸங்கவின் அபார சதத்துடனும், திமுத் கருணாரட்னவின் அசத்தல் அரைச்சதத்துடனும் போட்டியின் வெற்றி இலக்கை 44.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பெதும் நிஸ்ஸங்க தொடரில் பெற்ற இரண்டாவது தொடர் சதத்தோடும், தன்னுடைய 3ஆவது ஒருநாள் சதத்துடனும் 113 பந்துகளில் 14 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் டிமுத் கருணாரட்ன தன்னுடைய 10ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 83 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இந்த வீரர்கள் இருவரும் இலங்கை அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 190 ஓட்டங்களை பகிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>>அயர்லாந்து அணித் தலைமையில் அதிரடி மாற்றம்
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கெவின் சின்கிளய்ர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சினால் பிரயோஜனம் எதுவும் இருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக மகீஷ் தீக்ஷன தெரிவாகினார்.
இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 9ஆவது வெற்றியினை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Brandon King | b Mahesh Theekshana | 10 | 18 | 1 | 0 | 55.56 |
Johnson Charles | lbw b Matheesha Pathirana | 39 | 38 | 3 | 2 | 102.63 |
Shamarh Brooks | c Kusal Mendis b Mahesh Theekshana | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Shai Hope | lbw b Mahesh Theekshana | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Nicholas Pooran | c Pathum Nissanka b Dushan Hemantha | 14 | 20 | 1 | 0 | 70.00 |
Keacy Carty | c Dilshan Madushanka b Dasun Shanaka | 87 | 96 | 6 | 1 | 90.62 |
Kyle Mayers | b Sahan Arachchige | 18 | 36 | 1 | 0 | 50.00 |
Roston Chase | lbw b Dushan Hemantha | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Romario Shepherd | b Mahesh Theekshana | 26 | 21 | 3 | 0 | 123.81 |
Kevin Sinclair | b Dilshan Madushanka | 25 | 36 | 2 | 0 | 69.44 |
Akeal Hosein | not out | 6 | 13 | 0 | 0 | 46.15 |
Extras | 13 (b 0 , lb 5 , nb 1, w 7, pen 0) |
Total | 243/10 (48.1 Overs, RR: 5.04) |
Fall of Wickets | 1-36 (6.2) Brandon King, 2-42 (8.1) Shamarh Brooks, 3-55 (10.1) Shai Hope, 4-62 (11.4) Johnson Charles, 5-81 (16.5) Nicholas Pooran, 6-122 (27.4) Kyle Mayers, 7-123 (28.1) Roston Chase, 8-155 (34.4) Romario Shepherd, 9-218 (44.2) Kevin Sinclair, 10-243 (48.1) Keacy Carty, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 10 | 0 | 49 | 1 | 4.90 | |
Dasun Shanaka | 3.1 | 0 | 27 | 1 | 8.71 | |
Mahesh Theekshana | 10 | 0 | 34 | 4 | 3.40 | |
Matheesha Pathirana | 10 | 1 | 61 | 1 | 6.10 | |
Dushan Hemantha | 10 | 0 | 49 | 2 | 4.90 | |
Sahan Arachchige | 5 | 0 | 18 | 1 | 3.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Roston Chase b Kevin Sinclair | 104 | 113 | 14 | 0 | 92.04 |
Dimuth Karunaratne | lbw b Akeal Hosein | 83 | 92 | 7 | 0 | 90.22 |
Kusal Mendis | not out | 34 | 43 | 3 | 0 | 79.07 |
Sadeera Samarawickrama | not out | 17 | 18 | 1 | 0 | 94.44 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0) |
Total | 244/2 (44.2 Overs, RR: 5.5) |
Fall of Wickets | 1-190 (33.3) Pathum Nissanka, 2-204 (36.5) Dimuth Karunaratne, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kyle Mayers | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Romario Shepherd | 6.2 | 0 | 44 | 0 | 7.10 | |
Kevin Sinclair | 10 | 0 | 52 | 1 | 5.20 | |
Akeal Hosein | 10 | 0 | 52 | 1 | 5.20 | |
Roston Chase | 9 | 0 | 39 | 0 | 4.33 | |
Keacy Carty | 3 | 0 | 18 | 0 | 6.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<