Home Tamil நெதர்லாந்துக்கு எதிராக த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

நெதர்லாந்துக்கு எதிராக த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

ICC Men's Cricket World Cup Qualifier 2023

409
ICC Men's Cricket World Cup Qualifier 2023

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றினுடைய சுபர் சிக்ஸ் போட்டியில் இலங்கை 21 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான தமது வாய்ப்பினையும் இலங்கை கிரிக்கெட் அணி அதிகரித்துக் கொள்கின்றது.

>>ஓமான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

இலங்கை – நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி முன்னதாக ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தது.

அதேவேளை இப்போட்டிக்கான இலங்கை குழாத்திலும் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவிற்குப் பதிலாக டில்சான் மதுசங்க அழைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் நெதர்லாந்து இரண்டு மாற்றங்களுடன் இலங்கையை எதிர் கொண்டிருந்தது.

இலங்கைகுழாம்

பெதும்நிஸ்ஸங்க, திமுத்கருணாரட்ன, குசல்மெண்டிஸ், சதீரசமரவிக்ரம, சரித்அசலன்க, தசுன்ஷானக்க(தலைவர்), தனன்ஞயடிசில்வா, வனிந்துஹஸரங்க, மகீஷ்தீக்ஷன, டில்சான்மதுசங்க, லஹிருகுமார

நெதர்லாந்துகுழாம்

விக்ரமஜித்சிங், மேக்ஸ்ஓடோவ்ட், வெஸ்லிபரேஸி, பாஸ்டிலீடே, தேஜாநிடாமனுரு, ஸ்கொட்எட்வார்ட்ஸ்(தலைவர்), சகீப்சுல்பிகார், லோகன்வான்பீக், ஆர்யான்தத், சரீஸ்அஹ்மட், றயான்க்ளெய்ன்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. போட்டியின் முதல் பந்திலேயே ஆரம்ப வீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க லோகன் வான் பீக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.

பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் புதிய வீரராக வந்த குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடன் ஏமாற்றி ஆட்டமிழந்தார். மெண்டிஸின் பின்னர் புதிய வீரர்களாக வந்த சதீர சமரவிக்ரம (1), சரித் அசலன்க (2) ஆகியோரும் மோசமான ஆட்டங்களுடன் ஓய்வறை நடக்க இலங்கை ஒரு கட்டத்தில் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அணிக்கு கைகொடுத்த திமுத் கருணாரட்ன அணியின் 5ஆம் விக்கெட்டாக ஆட்டமிழக்க முன்னர் 2 பெளண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

திமுத் கருணாரட்னவின் பின்னர் அணித்தலைவர் தசுன் ஷானக்க புதிய வீரராக வந்து 5 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை மீண்டும் நெருக்கடியான நிலைக்குச் சென்றது. எனினும் இலங்கை அணியின் பின்வரிசையில் வந்த வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோருடன் இணைந்து சற்று பொறுப்பான முறையில் ஆடிய தனன்ஞய டி சில்வா அணியினை சரிவில் இருந்து மீட்டெடுக்க கைகொடுத்ததோடு தனன்ஞய டி சில்வாவின் ஆட்டம் காரணமாக இலங்கை 47.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 111 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் மகீஷ் தீக்ஷன 28 ஓட்டங்கள் எடுத்ததோடு இலங்கை அணியின் 8ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 77 ஓட்டங்களை தனன்ஞய டி சில்வாவுடன் இணைந்து பகிர்ந்தார். அதேநேரம் வனிந்து ஹஸரங்க 20 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து பந்துவீச்சு சார்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, சகீப் சுல்பிக்கர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அதன் ஆரம்பவீரர்களான விக்ரமஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடோவ்ட் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்த போதும் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய வெஸ்லி பர்ரேஸி அரைச்சதம் விளாசி நெதர்லாந்து கிரிக்கெட் அணியை வெற்றிப்பயணத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வைத்தார்.

எனினும் தசுன் ஷானக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் இணை முயற்சியோடு வெஸ்லி பர்ரேஸியின் விக்கெட் ரன் அவுட் ஒன்றின் மூலமாக வீழ்த்தப்பட்டது. அவர் 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதன் பின்னர் மகீஸ் தீக்ஸன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் சுழலில் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கிய நெதர்லாந்து அணிக்கு பாஸ் டி லீடே மற்றும் அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் ஆகியோர் நம்பிக்கை வழங்கும் வகையிலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதில் ஸ்கொட் எட்வார்ட்ஸ் அணியின் வெற்றிக்காக இறுதி வரை முயற்சி செய்திருந்தார்.

எனினும் இறுதியில் 40 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த நெதர்லாந்து கிரிக்கெட் அணி 192 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு இறுதிவரை போராடிய அதன் தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் பெற்றதோடு, பாஸ் டி லீடெ 53 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>>மற்றுமொரு இலகு வெற்றியுடன் சுபர் 6 சுற்றுக்கு செல்லும் இலங்கை

இலங்கை பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், வனிந்து ஹஸரங்க 53 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது இப்போட்டியில் இலங்கை அணிக்காக சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய தனன்ஞய டி சில்வாவிற்கு வழங்கப்பட்டது. இனி இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் சுபர் சிக்ஸ் போட்டியில் அடுத்ததாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Netherland
192/10 (40)

Sri Lanka
213/10 (47.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Saqib Zulfiqar b Logan van Beek 0 1 0 0 0.00
Dimuth Karunaratne c Scott Edwards b Saqib Zulfiqar 33 51 2 0 64.71
Kusal Mendis lbw b Ryan Klein 10 14 1 0 71.43
Sadeera Samarawickrama c Scott Edwards b Logan van Beek 1 13 0 0 7.69
Charith Asalanka c Teja Nidamanuru b Logan van Beek 2 8 0 0 25.00
Dhananjaya de Silva c Bas de Leede b Aryan Dutt 93 111 8 2 83.78
Dasun Shanaka lbw b Saqib Zulfiqar 5 20 0 0 25.00
Wanindu Hasaranga lbw b Bas de Leede 20 21 1 1 95.24
Mahesh Theekshana c Wesley Barresi b Bas de Leede 28 47 1 0 59.57
Lahiru Kumara lbw b Bas de Leede 2 5 0 0 40.00
Dilshan Madushanka not out 1 5 0 0 20.00


Extras 18 (b 4 , lb 3 , nb 0, w 11, pen 0)
Total 213/10 (47.4 Overs, RR: 4.47)
Bowling O M R W Econ
Logan van Beek 9 2 26 3 2.89
Ryan Klein 9 0 38 1 4.22
Bas de Leede 9.4 0 42 3 4.47
Aryan Dutt 8 0 34 1 4.25
Saqib Zulfiqar 10 0 48 2 4.80
Shariz Ahmad 2 0 18 0 9.00


Batsmen R B 4s 6s SR
Vikramjit Singh c Wanindu Hasaranga b Lahiru Kumara 0 2 0 0 0.00
Max O’Dowd lbw b Dilshan Madushanka 0 1 0 0 0.00
Wesley Barresi run out (Kusal Mendis) 52 50 6 1 104.00
Bas de Leede b Mahesh Theekshana 41 53 3 0 77.36
Teja Nidamanuru b Wanindu Hasaranga 0 2 0 0 0.00
Scott Edwards not out 67 68 4 2 98.53
Saqib Zulfiqar lbw b Mahesh Theekshana 2 5 0 0 40.00
Logan van Beek b Mahesh Theekshana 0 4 0 0 0.00
Shariz Ahmad run out (Kusal Mendis) 2 18 0 0 11.11
Ryan Klein b Wanindu Hasaranga 5 14 0 0 35.71
Aryan Dutt b Dasun Shanaka 7 25 0 0 28.00


Extras 16 (b 2 , lb 8 , nb 2, w 4, pen 0)
Total 192/10 (40 Overs, RR: 4.8)
Bowling O M R W Econ
Lahiru Kumara 2 0 17 1 8.50
Dilshan Madushanka 8 0 38 1 4.75
Mahesh Theekshana 9 2 31 3 3.44
Dasun Shanaka 4 0 18 1 4.50
Wanindu Hasaranga 10 0 53 2 5.30
Dhananjaya de Silva 7 0 25 0 3.57



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<