T20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள்

ICC T20 WORLD CUP

464
ICC planning to expand the T20 World Cup

T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்துவது குறித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை அவதானம் செலுத்தியுள்ளது. 

உலக அளவில் கால்பந்து உலகக் கிண்ணத்தில்தான் அதிக அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் தற்போது T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் உலக அளவில் பிரபல்யப்படுத்துவதற்காக T20 உலகக் கிண்ண தொடருக்கு 20 அணிகளைக் களமிறக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) பரிசீலித்து வருகிறது.  

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது

>> இந்தியாவிலிருந்து UAE இற்று மாறுகிறதா T20 உலகக் கிண்ணம்?

இந்த நிலையில், இவ்வருடத்துக்கான T20 உலகக் கிண்ணத் தொடர்  ஒக்டோபர்நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 16 அணிகள்தான் பங்கேற்கின்றன.  

இதனிடையே, 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் 20 அணிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ICC தெரிவித்துள்ளது. அவை ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன

ஏற்கனவே, பெண்களுக்கான T20 உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ICC நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, 50 ஓவர்கள் உலகக் கிண்ணத்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களாக ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது

கடந்த 2007ஆம் ஆண்டு 16 அணிகள், 2011ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு தொடர்களில் 14 அணிகள், கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 10 அணிகள் மற்றுமே பங்குபற்றியிருந்தன. இதற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது

எனவே, தற்போது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் மீண்டும் 14 அணிகளை களமிறக்க ICC முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

>> T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ICCஇன் கூட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் BCCI ஆதரவு தெரிவித்துள்ளது. ஒருவேளை, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டால் பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு பெற்று மேலும் சுவாரஸ்யமடையும்

எதுஎவ்வாறாயினும், 2032 அவுஸ்திரேலியாவின் கபாவில் நடைபெறும் என எதிர்பார்த்துள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் ICC களமிறங்கியுள்ளது. எனினும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலம்பிக்கில் இதற்கான கோரிக்கையை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுள்ளது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<