இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் ஜூன் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில். இந்த போட்டி நடப்பதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இதில் குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ள நிலையில் ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா சூழலில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை திட்டமிட்டபடியே எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உள்ளிட்டவற்றுடன் ஆலோசித்து வருகிறோம். இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி திட்டமிட்டபடியே நடைபெறும். இந்தியாவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேசி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ள இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள், இங்கிலாந்தில் ஜூன் மாதத்தில் இந்திய பயணிகளுக்கான தடை நீக்கப்படும் என நம்புவதாகத் தெரிவித்தன.
அத்துடன், இந்திய அணியினருக்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், போட்டி நடைபெறும் இடம், வீரர்கள் தங்கும் ஹோட்டல் போன்றவை முழுமையான, மிகக் கடுமையான (பயோ–பபுள்) பாதுகாப்பு வளையத்துக்குள்ளாகக் கொண்டுவரப்படும் என்று இங்கிலாந்து ஊடகங்கள் கூறியுள்ளன.
இந்த நிலையில், இந்திய பயணிகளுக்கு நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் அது, தற்போது ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து, நியூசிலாந்து வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Video – பயிற்சியாளராக புதுஅவதாரம் எடுத்த Kumar Dharmasena..! | Sports Roundup – Epi 158
ஏனெனில், ஜூன் தொடக்கத்தில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
எனவே, தடை இருக்கும் பட்சத்தில் மே இறுதியில் ஐ.பி.எல் போட்டி நிறைவுக்குப் பிறகு இரு நாட்டு வீரர்களும் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்படும்.
இதேநேரம், இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக இந்திய மகளிர் அணி ஜூன் மாதமும், இந்திய ஆடவர் அணி ஆகஸ்ட் மாதமும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…