பதவியினை இராஜினமாச் செய்த ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரி

33

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் நிறைவேற்று அதிகாரியான ஜியொப் அலார்டிஸ் தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

>>முதல்நாளில் பலம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

சுமார் கடந்த நான்கு வருட காலமாக ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டு வந்த அலார்டிஸ் புதிய வாய்ப்புக்களைத் தேடிய நிலையில் தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஐ.சி.சி. இற்காக பணிபுரிந்து வந்த அலார்டிஸ் பதவி விலகிய நிலையில் அவரின் இடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் ஐ.சி.சி. இன் நிர்வாகத் தலைவராக ஜெய் ஷா பதவியேற்ற பின்னர் இடம்பெறுகின்ற புதிய பதவி விலகலாக இது மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு விவகாரங்களுக்கு பொறுப்பாக காணப்பட்டிருந்த அலெக்ஸ் மார்ஷல் மற்றும் தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி கிளைர் பர்லோங் ஆகியோரும் தங்களது பதவிகளை இராஜினமா செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<