சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான ஹீத் ஸ்ட்ரேக் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் அடுத்த 8 வருடங்களுக்கு ஈடுபடாத அளவிற்கு தடை உத்தரவினை வழங்கியிருக்கின்றது.
>> ICC இன் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு
ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஹீத் ஸ்ட்ரேக், தான் பயிற்சியாளராக இருந்த காலங்களில் மேற்கொண்ட ஊழல் விடயங்களுக்காகவே தடை உத்தரவினை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் தொடர்பான ஐந்து பிரிவுகளில் ஐ.சி.சி. ஹீத் ஸ்ட்ரேக்கினை குற்றவாளியாக இனம் கண்டிருப்பதோடு, ஸ்ட்ரேக்கும் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் குற்றவாளியாக மாறியிருக்கும் ஹீத் ஸ்ட்ரேக் 2029 ஆண்டின் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரையில் கிரிக்கெட் விளையாட்டோடு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட தடை உத்தரவினைப் பெற்றிருக்கின்றார்.
>> இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது இடைநிறுத்தம்
கிரிக்கெட் பயிற்சியாளராக மாற முன் ஜிம்பாப்வே அணிக்காக சகலதுறைவீரராக விளையாடிய ஹீத் ஸ்ட்ரேக் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1990 ஓட்டங்களுடன் 216 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2943 ஓட்டங்களுடன் 239 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<