ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்

367
ICC

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த, “ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்” (APL) தொடரை முன்னெடுப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி அளித்துள்ளமை, தொடரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசெக்ஸ் அணியில் இணையும் ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர சுழல் வீரரான …

இதுதொடர்பில் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, “உறுப்பு நாடுகளின் வீரர்கள் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்கு, ஐசிசியின் உறுப்பினர் சபை எந்தவித தடையும் இல்லையென்ற சான்றிதழை வழங்கியுள்ளது”  என செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான சர்வதேச அணி வீரர்களை இணைப்பதற்கான ஒப்புதலை ஐசிசி உறுப்பினர் சபையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றிருக்கவில்லை.

இந்தநிலையில், குறித்த போட்டித் தொடருக்காக சர்வதேச வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரி்ல் காபுல், நங்ராஹர், கண்டாஹர், பல்காஹ் மற்றும் பக்டியா ஆகிய ஐந்து அணிகள் விளையாடவுள்ளன. அணிகளுக்கான உரிமையாளர்களை தெரிவுசெய்யவுள்ள ஏலத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எவ்வாறாயினும் இம்மாத இறுதியில் உரிமையாளர்கள் தெரிவுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷுக்கு ‘வைட்வொஷ்’ தோல்வி

நடைபெறவுள்ள இந்த APL தொடரானது ஷபகீஷா லீக் தொடரை விட வித்தியாசமானது. ஆப்கானிஸ்தானின் ஆறு உள்ளூர் அணிகள் பங்கேற்கும் ஷபகீஷா லீக் 12 நாட்கள் நடைபெறும். ஆனால் APL தொடர் சர்வதேச வீரர்களின் பங்கேற்பில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது ஈடுபாட்டினை அதிகரித்துக்கொள்ளும் முகமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை APL தொடரை ஆரம்பிக்கவுள்ளது. ஐசிசியின் முழு உறுப்புரிமை நாடாக கடந்த 2017ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இவ்வருடம் ஜுன் மாதம் இந்திய அணியுடன் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…