ஐ.சி.சி இன் வருடாந்த டி20 தரவரிசையில் இலங்கை சிறு முன்னேற்றம்

1224

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த டி20 தரவரிசையில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள அதேவேளை இலங்கை உள்ளிட்ட மேலும் மூன்று அணிகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது அதன் அந்தஸ்தை பெற்றுள்ள ஒவ்வொரு நாடுகளின் அணிகளும் 2016 – 2017 வரையிலான, 2017 – 2018 வரையிலான மற்றும் 2018 – 2019 வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு அணிகளும் பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் அணிகள் பெற்றுள்ள அடைவு மட்டங்களை ‘வருடாந்த தரவரிசை மாற்றம்’ என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றது. இது மே மாதம் முதல் வாரத்தில் கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் வருடாந்த தரவரிசையில் இலங்கைக்கு பாரிய வீழ்ச்சி

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் (02) டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளினது தரவரிசை வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (03) டி20 சர்வதேச அணிகளின் மாற்றம் செய்யப்பட்ட வருடாந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் 8 நாடுகளைச் சேர்ந்த அணிகள் குறித்த தரவரிசை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அந்த அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அவ்வாண்டின் ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண சம்பியனாக உருவாகிய பாகிஸ்தான் அணி தற்போது தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

தரவரிசை புதுப்பிக்கப்படுவதற்கு முன்னர் இறுதியாக 135 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி தற்போது 286 தரவரிPakistanசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

தரவரிசை புதுப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய அணியே 122 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்பட்டது. ஆனால் தற்போது இந்திய அணிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 120 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி தற்போது 262 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.  

மூன்றாமிடத்தில் தொடர்ந்தும் இங்கிலாந்து அணி காணப்படுகின்றது. முன்னர் 121 தரவரிசை புள்ளிகளுடன் காணப்பட்ட அவ்வணி தற்போது 261 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்கின்றது.

120 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி புதிய தரவரிசையின்படி 261 புள்ளிகளுடன் அதே நான்காமிடத்தில் காணப்படுகின்றது. இரண்டாமிடத்தில் காணப்பட்ட முதல் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி தற்போது 260 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. ஆறாமிடத்தில் அதே நியூஸிலாந்து அணி 254 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.

தரவரிசை புதுப்பிக்கப்படுவதற்கு முன்னர் 98 தரவரிசை புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஏழாமிடத்தில் காணப்பட்டது. ஆனால் எட்டாமிடத்தில் காணப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தற்போது 241 தரவரிசை  புள்ளிகளுடன் ஏழாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோன்று முன்னர் ஒன்பதாமிடத்தில் காணப்பட்ட இலங்கை அணி 227 புள்ளிகளுடன் எட்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளின் முன்னேற்றத்தினால் முன்னர் ஏழாமிடத்தில் காணப்பட்ட நடப்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்பதாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. பத்தாமிடத்தில் பங்களாதேஷ் அணி தொடர்ந்தும் காணப்படுகின்றது.

அதனை தொடர்ந்து நேபாளம், ஸ்கொட்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், பபுவா நியூகினியா, ஓமான், ஹொங்கொங் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் முறையே 11 தொடக்கம் 20ஆவது இடங்கள் வரை இடம்பெற்றுள்ளன.

இதில் முன்னர் 14ஆவது இடத்தில் 43 தரவரிசை புள்ளிகளுடன் காணப்பட்ட நேபாள அணி தற்போது 212 தரவரிசை புள்ளிகளுடன் 11ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில் தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு சந்தோசமான செய்தி கிடைத்துள்ள அதேவேளை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச டி20 அணிகளின் புதிய தரவரிசை (முதல் பத்து நிலைகள்)

  1. பாகிஸ்தான் – 286 புள்ளிகள்
  2. தென்னாபிரிக்கா – 262 புள்ளிகள்
  3. இங்கிலாந்து – 261 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 261 புள்ளிகள்
  5. இந்தியா – 260 புள்ளிகள்
  6. நியூசிலாந்து – 254 புள்ளிகள்
  7. ஆப்கானிஸ்தான் – 241 புள்ளிகள்
  8. இலங்கை – 227 புள்ளிகள்
  9. மேற்கிந்தியதீவுகள் – 226 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 220 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<