எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐசிசியனால் பெயரிடப்பட்ட வர்ணனையாளர் குழுவில் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் இலங்கை வீரருமான ரசல் பிரேமகுமாரன் ஆர்னல்ட் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஜுன் முதலாம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில், T20 உலகக் கிண்ணத்துக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று (24) வெளியிட்டுள்ளது.
இதில் முன்னாள் இலங்கை வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் ஆர்னல்ட் பெயரிடப்பட்டுள்ளார். ஐசிசியினால் நடத்தப்படுகின்ற கிரிக்கெட் தொடர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக ரஸல் ஆர்னல்ட் வலம் வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
- T20 உலகக் கிண்ணத்தில் சாதித்து காட்டுவோம் – வனிந்து ஹஸரங்க
- T20 உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி போட்டி அட்டவணை வெளியீடு
- T20 உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இரண்டு இலங்கையர்கள்
இவர்களைத் தவிர, தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், கிரேம் ஸ்மித், ஷோன் பொல்லாக், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், மெத்யூ ஹைடன், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச் ஆகியோரும், இங்கிலாந்தின் ஈயென் மோர்கன், பாகிஸ்தானின் வசீம் அக்ரம் உள்ளிட்டோரும் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஐசிசி T20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் விபரம்
ரவி சாஸ்திரி, நாசர் உசேன், இயென் ஸ்மித், மெல் ஜோன்ஸ், ஹர்ஷா போக்லே, இயென் பிஷொப், ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், எபோனி ரெயின்ஃபோர்ட்-ப்ரெண்ட், சாமுவேல் பத்ரீ, கார்லோஸ் பிராத்வைட், ஸ்டீவ் ஸ்மித், லிசா ஸ்டாலேகர், ரிக்கி பொண்டிங், சுனில் கவாஸ்கர், மெத்யூ ஹைடன், ரமிஸ் ராஜா, இயென் மோர்கன், டொம் மூடி, வசீம் அக்ரம், ஜேம்ஸ் ஓ’பிரைன், டேல் ஸ்டெய்ன், கிரேம் ஸ்மித், மைக்கல் அதர்டன், வக்கார் யூனிஸ், சைமன் டவுல், ஷோன் பொல்லாக், கேட்டி மார்ட்டின், மம்புலெலோ எம்பாங்வா, நடாலி ஜெர்மானோஸ், டேனி மோரிசன், அலிசன் மெரிசன் ஆலன் வில்கின்ஸ், பிரையன் முர்கட்ராய்ட், மைக் ஹேஸ்மேன், இயென் வோர்ட், அதர் அலி கான், ரஸல் ஆர்னல்ட், நியால் ஓ பிரையன், காஸ் நைடூ, டெரன் கங்கா
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<