ஐசிசி மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகியன இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளுடன் இணைந்து “சிறுவர்களுக்காக ஒருநாள்” (One Day 4 Children) என்ற செயற்திட்டத்தில் சிறுவர்களுக்கு ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளன.
ஒரு பில்லியன் ரசிகர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு குழந்தையும் வாழ்வதற்கும் செழிப்பதற்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற செய்தியுடன் இலங்கை – இந்தியா அணிகள் நவம்பர் 2ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்த வனிந்து ஹஸரங்க
இலங்கை – இந்திய அணிகள் மோதவுள்ள இந்த உலகக்கிண்ணப் போட்டியில் வான்கடே மைதானம் முழுமையாக நீள நிறமாக காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த உலகத்தை உருவாக்க உதவுவதோடு, ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமமான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற செய்தியானது உலகக்கிண்ணம் மூலம் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நீள நிறத்தில் மின்னும் LED மணிக்கட்டு பட்டிகள் கொடுக்கப்படும் என்பதுடன், மைதானத்துடன் இணைந்து போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் குறித்த LED மணிக்கட்டு பட்டிகள் மிளிரச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“சிறுவர்களுக்காக ஒருநாள்” என்ற ஐசிசியின் இந்த செயற்திட்டமானது, “நல்ல வியூகத்துக்காக ஐசிசி கிரிக்கெட்” என்ற செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி ஐசிசி, யுனிசெப் மற்றும் இந்திய கிரிக்கெட் சபை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட வாழ்க்கைத் திறன் கற்றல் முயற்சிக்கான Criiio 4 Good என்ற இணைய சேவையும் இலங்கை – இந்தியப் போட்டியின் போது ஆரம்பிக்கப்படவுள்ளது. criiio.com/criiio4good இணையத்தளங்கள் ஊடாக 8 கற்றல் தொகுதிகளை இலவசமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், 1.5 மில்லியன் பாடசாலைகளுக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்வதற்கு இந்தியாவின் கல்வி அமைச்சு திட்டமிட்டு வருகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<