2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மொனாக்கோவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் சங்கங்களின் சம்மேளன விருது விழாவில் உலகின் அதிசிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைகளுக்கான பட்டியலை உலக மெய்வல்லுனர் சம்மேளனம் (IAAF) வெளியிட்டுள்ளது.
மூன்று வகையான வாக்களிப்பு நடைமுறையில் இந்த வீராங்கனைகளின் இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.
கின்னஸ் சாதனை முயற்சியில் களமிறங்கியுள்ள தேசிய வேகநடை வீரர்
தினா ஏஷர் ஸ்மித் (பெரிய பிரித்தானியா)
100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் உலக சம்பியன் மற்றும் இவ்வருடத்துக்கான அதி சிறந்த நேரப் பெறுமதிகளைப் பதிவு செய்தவர். இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் 4 x 100 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான 200 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அதிலும் குறிப்பாக ஐரோப்பிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 100, 200 மற்றும் 4 x 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஹெட்ரிக் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
பியட்ரிஸ் செகோச் (கென்யா)
பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் உலகின் முன்னிலை வீராங்கனையும், நடப்பு சம்பியனுமான இவர், இவ்வருடம் நடைபெற்ற எட்டு சர்வதேசப் போட்டிகளில் 7இல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கண்டங்கள் கிண்ணம், ஆபிரிக்க வல்லவர் போட்டி, டயமண்ட் லீக் ஆகிய போட்டித் தொடர்களில் சம்பியன் பட்டம் வென்ற அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
அத்துடன், உலக உள்ளக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றரில் தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.
கெத்தரின் இபர்குவென் (கொலம்பியா)
பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சலில் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கெத்தரின், இவ்வருடம் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் கண்டங்கள் கிண்ணம், டயமண்ட் லீக் சம்பியன்ஷிப் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றார். அத்துடன், பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் சம்பியன் மற்றும் டயமண்ட் லீக் பட்டங்களையும் அவர் தட்டிச் சென்றார்.
ஷவ்னே மில்லர் உய்போ (பஹ்hமாஸ்)
உலக மெய்வல்லுனர் அரங்கில் அண்மைக்காலமாக சுவட்டு நிகழ்ச்சிகளில் வெற்றிகளை பதிவுசெய்து வருகின்ற மில்லர் உய்போ, பெண்களுக்கான 200 மீற்றர், 4 x 100 மீற்றர் மற்றும் சட்டவேலி உட்பட 5 வகையான சுவட்டு நிகழ்ச்சிகளில் 15 தடவைகள் தொடர் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டார். இதில் 13 இறுதிப் போட்டிகளும், 2 முன்னோடிப் போட்டிகளும் உள்ளடங்கும். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.
இது இவ்வாறிருக்க, இம்முறை நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தார்.
2018 IAAF சிறந்த மெய்வல்லுனர் வீரர் விருது – ஆடவர் இறுதிப் பட்டியல்
நபிசாட்டு தியாம் (பெல்ஜியம்)
பெண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (ஹெப்டத்லன்) நடப்பு ஐரோப்பிய சம்பியனாகவும், பெண்களுக்கான உயரம் பாய்தலில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<