இலங்கை அணியில் உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை

773

இலங்கை கிரிக்கெட் அணியில் உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை என தான் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் காலெத் மஹ்மூட் குறிப்பிட்டிருக்கின்றார்.

>> ஆசியக்கிண்ணத்தில் இலங்கை – பங்களாதேஷ் மோதும் நொக்-அவுட் போட்டி!

இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க, ஆப்கானிஸ்தானோடு ஒப்பிடும் போது பங்களாதேஷ் அணியில் இரண்டு உலகத்தரமிக்க பந்துவீச்சாளர்கள் மாத்திரமே இருக்கின்றனர் எனக் கூறிய கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே காலெத் மஹ்மூத் இலங்கையில் உலகத் தரமிக்க பந்துவீச்சாளர்கள் எவரும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

“எனக்கு தசுன் ஷானக்க ஏன் இப்படியான விடயம் ஒன்றை கூறினார் என்பது தெரியாது. பங்களாதேஷிடம் சகீப்பினையும், முஸ்தபிசூரையும் தாண்டி வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை எனக் கேட்டேன். உண்மையில் இலங்கை அணியிலேயே (உலகத் தரம் வாய்ந்த) பந்துவீச்சாளர்கள் இல்லை” என ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் காலெத் மஹ்மூட் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆசியக் கிண்ணத் தொடரினுடைய போட்டி நொக் அவுட் குழுநிலை போட்டி நாளை (01) ஆரம்பமாகவுள்ளது.

>> ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை!

இப்போட்டியில் வெற்றி பெறும் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மாத்திரமே ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்கு குழு B இல் இருந்து செல்ல முடியும் என்கிற நிலை காணப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<