அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான டேவிட் வோர்னர் தனக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் (CA) கடந்தகால செயற்பாடுகள் வருத்தம் தந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தமிழ் நாட்டு வீரர்
கடந்த 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வோர்னர் அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு ஒரு வருட போட்டித் தடையினைப் பெற்றதோடு, தனது வாழ்நாள் பூராகவும் தலைமைத்துவப் பொறுப்புக்களில் இருக்க முடியாத தடையினையும் பெற்றிருந்தார்.
எனினும் தமது கிரிக்கெட் வீரர்களுக்கான ஒழுக்க நெறிமுறைக் கோவையினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தற்போது மாற்றியமைத்திருக்கும் நிலையில், டேவிட் வோர்னரிற்கு தலைமைத்துவத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையினை நீக்குவதற்கு இனிமேல் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி நீண்ட காலம் ஒழுக்க நெறிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தாமதமாக இருந்தமைக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீது விமர்சனங்களை டேவிட் வோர்னர் வைத்திருக்கின்றார்.
”நான் ஒரு குற்றவாளி கிடையாது.”
”உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் மறு பரிசீலனைக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனக்கு அவர்கள் ஒரு தடையை விதித்திருந்தார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது. ஆனால், ஒருத்தருக்கு வாழ்நாள் தடையினை வழங்குவது என்பது சற்று கடுமையானது.”
”எனக்கு இப்போது வருத்தமாக இருக்கின்றது. ஏனெனில் இது முதலாவதாக கொண்டு வரப்பட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்னரே செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயம்.” என டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீது தனக்கு இருந்த விமர்சனத்தினை முன் வைத்திருந்தார்.
புதிய வடிவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் 2024!
அதேநேரம் தடைகள் நீங்குவதன் காரணமாக அவுஸ்திரேலிய ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஆரோன் பின்ச் விலகிய பின்னர், டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு தலைவராக நியமனம் செய்யப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது,
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<