இந்திய அணி சிம்பாபேவிற்கு சுற்றுப்பயனம் செய்து விளையாடி வருகிறது. இதில் அவர்கள் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் மிக இலகுவாக வெற்றி கொண்டு தொடரை வென்றுள்ளார்கள்.இது தொடர்பாக சிம்பாப்வே கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் மக்காயா நிட்டினி இந்தியாவிடம் தொடரை இழந்தவுடன் தக்காளி மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்ய நினைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி டோனி தலைமையில் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் தலைவர் டோனியைத் தவிர அனைவரும் இளம் வீரர்கள், ஆனால் சிம்பாப்வே அணியைப் பொறுத்த வரையில் அனைவரும் சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றவர்கள். சிம்பாப்வே அணியின் தோல்வியை சற்றும் எதிர்பாராத அந்த அணியின் பயிற்சியாளர் மக்காயா நிட்டினி விரக்தியில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “நான் ஏறக்குறைய தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டேன். மைதானத்தின் வெளியில் தக்காளி மரம் ஏதேனும் இருந்திருந்தால் அதில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பேன். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆட்டத்தை எளிதில் கணித்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை செய்யத் தவறிவிட்டோம்” என்று தனது அதிருப்தியை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்