அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை எச்சரிக்கும் ரஷீட் கான்!

Afghanistan Cricket

202

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கின் அடுத்த பருவகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர் ரஷீட் கான் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசு அமைக்கப்பட்ட பின்னர் மகளிருக்கான அனைத்து வகை விளையாட்டுகளும் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் இதனால் பாதிக்கப்பட்டது. எனவே மகளிருக்கான விளையாட்டு சுதந்திரத்தை தடுத்து வருகின்றமை காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தவிர்த்து வருகின்றது.

ஐசிசியினால் நடத்தப்படும் தொடர்களை தவிர்த்து, இருதரப்பு தொடர்களில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மறுத்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், அடுத்துவரும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரையும் ஒத்திவைத்துள்ளது. இதனால் ரஷீட் கான் பிக் பேஷ் லீக்கில் பங்கேற்கும் தீர்மானம் குறித்து ஆராய்ந்து வருகின்றார். இதுதொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

IPL போட்டியிலிருந்து விலக தீர்மானித்த கிளேன் மெக்ஸ்வெல்!

“இந்த விடயம் எம்மை காயப்படுத்துகிறது. சர்வதேசத்தில் உள்ள சிறந்த அணிகளுடன் விளையாடினால் மாத்திரமே எம்மை முன்னேற்றிக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் வீரராக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இதனை அரசாங்கம் சரிசெய்ய வேண்டும். ஆனால் இதுபோன்ற விடயங்கள் (தொடர் ஒத்திவைப்பு) நடக்கும் போது எனக்கு கவலையாக உள்ளது. இந்த விடயம் ஏன் கிரிக்கெட்டை காயப்படுத்துகிறது?

கிரிக்கெட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா? என்னுடைய அணிக்கு எதிராக உங்களால் விளையாட முடியாவிட்டால்? நான் ஏன் உங்கள் நாட்டில் விளையாட வேண்டும்? என்னுடைய வீரர்களுடன் உங்களால் விளையாட முடியாது. ஆனால் என்னுடன் விளையாட முடியும். இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? எனவே நான் இதனால் என்னுடைய நண்பர்களையும், என்னுடைய நாட்டையும் விட்டுக்கொடுக்கிறேன். என்னுடைய நாட்டை விட எனக்கு பெரியது ஒன்றும் இல்லை” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<