15ஆவது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி- சுலோவாக்கியா அணிகள் மோதின.
ஜெர்மனி வீரர்களின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் சுலோவாக்கியா திணறியது.
ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணியில் போடெங் (8ஆவது நிமிடம்), கோமஸ் (43ஆவது நிமிடம்), ஜூலியன் டிராக்ஸ்லெர் (63ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
மற்றொரு 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம்- ஹங்கேரி அணிகள் மோதின. பெல்ஜியம் வீரர்கள் கோல் மழை பொழிந்து ஹங்கேரியைத் திணறடித்தனர்.
பெல்ஜியம் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று கால் இறுதிக்குத் தகுதி பெற்றது. அந்த அணியில் அல்டர் வயரெல்டு (10ஆவது நிமிடம்), பாட்சுகி (78ஆவது நிமிடம்), ஈடன் ஹசார்ட் (80ஆவது நிமிடம்), கிராஸ்கோ (91ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
பெல்ஜியம் கால்இறுதியில் வேல்ஸ் அணியை ஜூலை 1ஆம் திகதி சந்திக்கிறது.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து குடியரசுவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் இத்தாலி- ஸ்பெயின் (இரவு 9.30 மணி), இங்கிலாந்து ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்