பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினை தவறவிடும் ஜேசன் ஹோல்டர்

94

பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.

>>ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்தில் முன்னணி சகலதுறைவீரரான ஜேசன் ஹோல்டர் உபாதை காரணமாக விலகியிருக்கின்றார்.

எனினும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உபாதை காரணமாக ஆடாது போயிருந்த சுழல்பந்துவீச்சாளர் கெவின் சின்கிளய்ர் மேற்கிந்திய தீவுகள் தொடரில் மீண்டும் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளர்களான அல்சாரி ஜோசேப மற்றும் கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அன்டர்சன் பிலிப் ஆகியோருக்கு மீண்டும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் பிரதி தலைவர் பொறுப்பினை ஜோசுவா டா சில்வா வழங்க, சுழல்பந்துவீச்சாளர்களான குடாகேஷ் மோட்டி மற்றும் பிரையன் சார்ளஸ் ஆகியோர் டெஸ்ட் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 22ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 30ஆம் திகதி ஜமைக்காவில் நடைபெறுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

 

கிரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோசுவா டா சில்வா, அலீக் அதான்சி, கீசி கார்ட்டி, ஜஸ்டின் கிரேவ்ஸ், காவேம் ஹொட்கே, டெவின் இமால்ச், அல்சாரி ஜோசேப், மிக்கெல் லூயிஸ், அன்டர்சன் பிலிப், கேமர் ரோச், ஜய்டென் சீல்ஸ்,  கெவின் சின்கிளய்ர், ஜோமெல் வர்ரிகன்

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<