மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பூரன், ஹோல்டர்

West Indies Cricket

305
West Indies Cricket

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை 2023-24 பருவகாலத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதில் ஆடவர் அணியின் 14 வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

>> ஜப்பானுக்கு எதிராக இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி இலகு வெற்றி

குறித்த இந்த ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ள போதும், இவர்கள் அடுத்த ஆண்டுக்கான T20i போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் புதிய வீரர்கள் சிலருக்கும் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடகெஷ் மோடிஸ், கீஷி கார்டி, டெக்நரைஷ் சந்ரபோல் மற்றும் அலைக் அதனைஷ் ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அணியின் முன்னணி வீரர்களான கிரைக் பிராத்வைட், ஷேய் ஹோப், ரோவ்மன் பவெல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற ஆகியோரும் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தத்தை பெற்றுள்ள மே.தீவுகள் வீரர்கள்

அலைக் அதனைஷ், கிரைக் பிராத்வைட், கீஷி கார்டி, டெக்நரைன் சந்ரபோல், ஜோசுவா டி சில்வா, ஷேய் ஹோப், ஆகில் ஹொஷைன், அல்ஷாரி ஜோசப், பிரெண்டன் கிங், குடகெஷ் மோடிஸ், ரோவ்மன் பவெல், கெமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெபர்ட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<