இந்த ஆண்டு 102 ஆவது தடவையாக இடம்பெற்ற கண்டி திரித்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி இடையிலான மலையக நீலங்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி மலையக நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணத்தை கடந்த ஆண்டு முதல் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணியிடம் இருந்து கைப்பற்றியிருக்கின்றது.
மலையக நீலங்களின் சமரில் புனித அந்தோனியர் கல்லூரி முன்னிலை
இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டி நேற்று (8) கண்டி அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித அந்தோனியார் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்டனர்.
இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித அந்தோனியார் கல்லூரி அணிக்கு சமிந்து விக்கிரமசிங்க சதம் ஒன்றினை பெற்றுத்தர, அசித்த வன்னிநாயக அரைச்சதம் ஒன்றுடன் உறுதியளித்தார்.
இவர்களது துடுப்பாட்ட உதவிகள் காரணமாக வலுப்பெற்றுக் கொண்ட புனித அந்தோனியார் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 298 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
புனித அந்தோனியார் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த சமிந்து விக்கிரமசிங்க 128 ஓட்டங்களை பெற, அரைச்சதம் பெற்ற அசித்த வன்னிநாயக 54 ஓட்டங்களை குவித்திருந்தார்.
அதேநேரம் திரித்துவக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக கவிஷ்க சேனாதீர 98 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த திரித்துவக் கல்லூரி அணி 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருந்தது.
இன்று (9) இரண்டாம் நாளாக தொடர்ந்த போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த திரித்துவக் கல்லூரி அணி தடுமாற்றம் காட்ட தொடங்கியது.
தொடர்ச்சியான தடுமாற்றம் காரணமாக ஒரு கட்டத்தில் 90 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்த திரித்துவக் கல்லூரி அணிக்கு அதன் அணித்தலைவரான புபுது பண்டார தனது போராட்ட ஆட்டத்துடன் பெறுமதி சேர்த்தார்.
தொடர்ந்து புபுது பண்டாரவின் துடுப்பாட்ட உதவியோடு திரித்துவக் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
திரித்துவக் கல்லூரி அணிக்காக தனது போராட்டமான துடுப்பாட்டம் மூலம் உதவிய புபுது பண்டார 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், சானுக்க குமாரசிங்கவும் 33 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மறுமுனையில் புனித அந்தோனியார் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் நிம்னக்க ஜயத்திலக்க 5 விக்கெட்டுக்களையும், சசித் ஹிருதிக 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரித்துவக் கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸினை அடுத்து போட்டியில் மழையின் இடையூறு உருவாகிய காரணத்தினால் இரு அணிகளதும் இரண்டாம் இன்னிங்சுகளை ஆரம்பிக்க முடியாமல் ஆட்டம் சமநிலை அடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் புனித அந்தோனியார் கல்லூரி வெற்றியாளர்களாக தெரிவாகியது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
C Wickramasinghe | c & b Kavishka Senadeera | 128 | 190 | 4 | 1 | 67.37 |
A Wanninayake | lbw b Kavishka Senadeera | 54 | 66 | 11 | 0 | 81.82 |
G Ebert | c Ruvin Peiris b Abishek Anandakumar | 4 | 8 | 0 | 0 | 50.00 |
T Gunasinghe | c Chanuka Kumarasinghe b U H Wimaladarma | 25 | 37 | 3 | 0 | 67.57 |
L Werellagama | lbw b Kavishka Senadeera | 21 | 50 | 0 | 0 | 42.00 |
T Abeykoon | c & b | 21 | 23 | 0 | 0 | 91.30 |
K Senarathna | c Jeff Weerasinghe b Abishek Anandakumar | 11 | 14 | 0 | 0 | 78.57 |
G Achintha | run out () | 8 | 13 | 0 | 0 | 61.54 |
M Kamil | not out | 7 | 9 | 0 | 0 | 77.78 |
S Hirudika | not out | 5 | 3 | 0 | 0 | 166.67 |
Extras | 14 (b 4 , lb 6 , nb 4, w 0, pen 0) |
Total | 298/8 (76 Overs, RR: 3.92) |
Did not bat | N Jayathilaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ruvin Peiris | 11 | 0 | 68 | 0 | 6.18 | |
Avishka Senadeera | 4.3 | 0 | 25 | 0 | 5.81 | |
Pubudu Bandara | 0.3 | 0 | 1 | 0 | 3.33 | |
Kavishka Senadeera | 26 | 1 | 98 | 4 | 3.77 | |
Abishek Anandakumar | 25 | 4 | 77 | 2 | 3.08 | |
Shene Gunathilake | 2 | 0 | 5 | 0 | 2.50 | |
U H Wimaladarma | 7 | 0 | 14 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shene Gunathilake | c G Achintha b C Wickramasinghe | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Abishek Anandakumar | b S Hirudika | 4 | 44 | 0 | 0 | 9.09 |
Chanuka Kumarasinghe | st b N Jayathilaka | 33 | 77 | 6 | 0 | 42.86 |
Avishka Senadeera | c T Gunasinghe b S Hirudika | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Ashan Lokukatiya | b N Jayathilaka | 17 | 42 | 3 | 0 | 40.48 |
Umair Raizan | lbw b N Jayathilaka | 10 | 34 | 0 | 0 | 29.41 |
Dinitha Siriwardena | c L Werellagama b K Senarathna | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Kavishka Senadeera | lbw b N Jayathilaka | 12 | 14 | 2 | 0 | 85.71 |
Uvindu Wimaladharma | c L Werellagama b N Jayathilaka | 10 | 64 | 2 | 0 | 15.62 |
Pubudu Bandara | c S Hirudika b K Senarathna | 60 | 99 | 8 | 2 | 60.61 |
Ruvin Peiris | not out | 9 | 28 | 2 | 0 | 32.14 |
Extras | 14 (b 9 , lb 0 , nb 4, w 1, pen 0) |
Total | 173/10 (72 Overs, RR: 2.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
S Hirudika | 11.1 | 7 | 8 | 3 | 0.72 | |
C Wickramasinghe | 6 | 3 | 15 | 1 | 2.50 | |
K Senarathna | 19 | 5 | 57 | 1 | 3.00 | |
N Jayathilaka | 28 | 13 | 57 | 5 | 2.04 | |
G Ebert | 3 | 0 | 9 | 0 | 3.00 | |
A Wanninayake | 5 | 1 | 18 | 0 | 3.60 |