PSG இன் வளர்ச்சிக்கு பங்களித்த நெய்மாருக்கு குவியும் பாராட்டு

208
Neymar - Getty Image
Neymar - Getty Image

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கழகத்துக்காக விளையாடிவரும் பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் பங்களிப்பானது அந்தக் கழகத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததாக அதே கழகத்தைச் சேர்ந்த மத்திய கள வீரர்களில் ஒருவரான அண்டர் ஹெர்ரெரா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டதில் பிரான்ஸும் ஒன்று.  

கடந்த மாதம் முதல் வாரம் லீக்-1 கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால் மே மாதம் 11ஆம் திகதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹாலண்டை திட்டமிட்டு கேலி செய்த நெய்மார்

கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பொருசியா டொர்ட்முண்ட் அmணிக்கு எதிரான…

இந்நிலையில் லீக்-1 கால்பந்து போட்டிகள் ஜூன் 3ஆம் திகிதி அல்லது ஜூன் 17ஆம் திகதி தொடங்க வாய்ப்புள்ளதாக லீக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகமானது இம்முறை லீக் போட்டிகளில் முன்னிலையில் உள்ள அணிகளில் ஒன்றாக விளங்குவதுடன், அந்தக் கழகம் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.  

அத்துடன்,  Coupe de Fracne மற்றும் Coupe de la தொடர்களிலும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதுஇவ்வாறிருக்க, பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகத்தின் அண்மைக்கால வெற்றிகளுக்கு நெய்மாரின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், குறிப்பாக சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில்  Borussia Dortmund அணிக்கெதிராக அவர் வெளிப்படுத்தியிருந்த ஆட்டம் குறித்தும் அந்தக் கழகத்தின் சக வீரரான அண்டர் ஹெர்ரெரா, கெனல் ப்ளஸ் என்ற ஊடகத்துக்கு வழங்கி செவ்வியில்

நாங்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். ஆனால், அவர் போட்டி குறித்து மிகவும் அவதானத்துடன் இருந்தார். பிறகு அனைவரையும் மைதானத்துக்குச் அழைத்துச் சென்றார்.

சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறிய மெஸ்ஸி

கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த உலக சுகாதார பணியாளர்களின் வாரத்தை ஒட்டி பார்சிலோனா நட்சத்திர வீரர் லியோனல் ….

பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகம் தொடர்பில் நெய்மார் அக்கறை செலுத்துவதில்லை என ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் அணிக்காக கடந்த காலங்களில் செய்த அர்ப்பணிப்பை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன்

இந்தக் காலப்பகுதியில் நெய்மார் அணிக்காக நிறைய விடயங்களைப் பெற்றுக் கொடுத்தார். உலகத்தரம் வாய்ந்த வீரரொருவர் அர்ப்பணிப்புடன் விளையாடுகின்றார் என்பது அணியின் வளர்ச்சியில் அவர் பெரிதும் கரிசணை செலுத்துவதை உணர்த்தி நிற்கின்றது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டுள்ள போட்டிகள் குறித்து அண்டர் ஹெர்ரெரா கருத்து தெரிவிக்கையில்

“மிக விரைவில் அனைத்து கால்பந்தாட்டத் தொடர்களும் ஆரம்பமாகும் என நம்புகிறேன். ஆனால் அதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் அதுதொடர்பில் பேசுவதற்கு நான் விசேட நிபுணர் அல்ல.  

எனினும், அனைத்து வீரர்களையும் பரிசோதனை செய்து அல்லது அணியொன்றில் சுமார் 50 பேரை இணைத்துக் கொண்டு மூடிய மைதானத்தில் போட்டிகளை எம்மால் நடத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்

என்னைப் பொறுத்தமட்டில் கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆனால் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்

எமது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் இந்தக் காலப்பகுதியில் நிறைய விடயங்களைப் பற்றி பேசினோம். எனவே அனைவரும் தொடர்பில் உள்ளார்கள்

எமக்கிடையில் செய்திகளை பரிமாற்றிக் கொண்டு வருகிறோம். அது பொதுவாக நடைபெறக்கூடிய விடயம் தான். ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதற்கு பழகி விட்டோம்.  

கொரோனாவுக்கு மத்தியில் துர்க்மெனிஸ்தானில் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் இவ்வார இறுதியில் பார்வையாளர்களுடன் அந்நாட்டு கால்பந்து பருவத்தை மீண்டும்…

பயிற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து நண்பர்களுடன் நாட்களை கழித்தோம். தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டதாக கூறினார்

இதனிடையே சக அணி வீரரான மார்கோ வெர்ராடி அண்மைக்காலமாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட அண்டர் ஹெர்ரெரா நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதன்மூலம் அதிக பயனைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<