மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

2023

T20 உலகக் கிண்ணத்தினை இலங்கை கிரிக்கெட் அணி முதல் தடவையாக கடந்த 2014ஆம் ஆண்டில் வென்றது. பங்களாதேஷில் நடைபெற்ற இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில், இந்திய கிரிக்கெட் அணியினை இறுதிப் போட்டியில் வீழ்த்தியே இலங்கை அணி முதல் தடவையாக T20 யில் சம்பியன் மகுடம் சூடியது.

பாக்.கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் இராஜினாமா

2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் வெற்றி பெற முன்னர், குறித்த T20 உலகக் கிண்ணத்தில் குழு 1 இல் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக மிகவும் சிக்கலான, சாதகமின்றிய நிலைமைகளே காணப்பட்டிருந்ததுs.

ஏனெனில், குறித்த T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பத்தினை காட்டிய போதும், இலங்கை அணியின் கடைசி குழுநிலைப் போட்டியில் நியூசிலாந்தினை வீழ்த்தினால் மாத்திரமே, அரையிறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்கிற நிலை உருவாகியிருந்தது.

தொடர்ந்து இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான தீர்மானம் கொண்ட T20 உலகக் கிண்ண குழுநிலைப் போட்டி, 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி சிட்டகொங்கில் ஆரம்பமாகியது. குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 19.2 ஓவர்களுக்கு 119 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தனர். இலங்கை கிரிக்கெட் அணியும் குறித்த T20 உலகக் கிண்ணத் தொடரில் வெளிப்படுத்திய மிக மோசமான துடுப்பாட்டமாக இது அமைந்தது.

2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர், இரண்டு தடவைகள் இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதும் இலங்கை இரசிகர்களின் எதிர்பார்ப்பும், இலங்கை வீரர்களின் போராட்டமும் தொடர்ச்சியாக வீணானது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தினை மீண்டும் ஒரு தடவை கோட்டைவிட்டு விட்டது என்றே அனைவரும் நினைத்திருந்தனர். காரணம், பிரன்டன் மெக்கலம், கேன் வில்லிம்சன், ரொஸ் டெய்லர் மற்றும் மார்டின் கப்டில் என மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையினைக் கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 119 ஓட்டங்களை விரட்டியடிப்பது என்பது சுலபமான விடயம்.

ஆஸியில் சதமடித்து சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கினை விரட்ட ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தது. எனினும், போட்டியின் நான்காவது ஓவரில் ரன் அவுட் முறையில் 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தவாறு தமது முதல் விக்கெட்டினை நியூசிலாந்து அணி பறிகொடுத்தது. மார்டின் கப்டில் 05 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியங்களும் காத்திருந்தன. குறித்த போட்டியில் உபாதை பிரதியீட்டு வீரராக அணிக்குள் நுழைந்த ரங்கன ஹேரத், தனது மாயஜால சுழலின் மூலம் நியூசிலாந்தின் பெயர் போன துடுப்பாட்டவீரர்களினை ஒவ்வொருவராக ஓய்வறை அனுப்பினார்.

ஹேரத்தின் விக்கெட் வேட்டைக்கு முதல் இரையான வீரராக நியூசிலாந்தின் அதிசிறந்த T20 துடுப்பாட்டவீரரான பிரன்டன் மெக்கலம் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஸ்டம்ப்ஸ் செய்யப்பட்டு வெளியேற, ஹேரத் இரண்டாவதாக தனது அடுத்த ஓவரில் ரொஸ் டெய்லரினை ஓய்வறை அனுப்பியிருந்தார். LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட ரொஸ் டெய்லரும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நியூசிலாந்தின் எதிர்பார்ப்பு துடுப்பாட்டவீரர்களான ஜேம்ஸ் நீஷம், லூக் ரொன்ச்சி ஆகியோரும் ரங்கன ஹேரத்தினால் ஓய்வறை அனுப்பப்பட 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து அணி தடுமாற்றம் காணத் தொடங்கியது. இந்த வீரர்களில் ஓட்டம் எதனையும் பெறாத ஜேம்ஸ் நீஷம் ஹேரத்தினால் போல்ட் செய்யப்பட, லூக் ரொன்ச்சி வெறும் 2 ஓட்டங்களுடன் LBW முறையில் ஹேரத்திடம் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை பறிகொடுக்க அவ்வணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியின் போக்கும் முழுமையாக மாறியது.

ரங்கன ஹேரத்தின் சுழல்பந்துவீச்சினால் துவம்சம் செய்யப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அப்போதைய இலங்கை அணியின் முன்னணி சுழல்வீரர் சஜித்ர சேனநாயக்கவினால் மேலும் பலவீனப்படுத்தப்பட, இலகுவாக இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இலங்கை அணியுடன் படுதோல்வி அடைந்தது.

இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்

இதில் தனது இறுதி விக்கெட்வேட்டையாக நியூசிலாந்தின் பின்வரிசை வீரரான டிரன்ட் போல்டினை பிடியெடுப்பில் ஆட்டமிழக்கச் செய்த ரங்கன ஹேரத் வெறும் 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து நியூசிலாந்து அணியின் 5 விக்கெட்டுக்களை தனது மாயஜால பந்துவீச்சு மூலம் கைப்பற்றியிருந்தார். அதோடு, ஹேரத் குறித்த போட்டியில் இலங்கை அணிக்கு தலையிடி கொடுத்த கேன் வில்லியம்சன் அடங்கலாக இரண்டு முக்கிய ரன்-அவுட்களிலும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரங்கன ஹேரத் இப்போட்டியில் வெளிப்படுத்திய பந்துவீச்சு இலங்கை அணி T20 உலகக் கிண்ண குழு 1 இல் முதல் இடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக மாறியிருந்ததோடு, இலங்கை அணி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக பிரதான காரணமாக மாறியிருந்தது.

ஹேரத்தின் பந்துவீச்சோடு 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவினை வீழ்த்தி முதல்முறையாக சம்பியன் பட்டமும் வென்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…