ஹேரத்திற்கு மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வாழ்நாள் உறுப்புரிமை

279

கிரிக்கெட்டின் சட்டவிதிமுறைகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC), உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 18 பேருக்கு புதிய வாழ்நாள் உறுப்பினர் பதவி வழங்கிய நிலையில், இந்த வாழ்நாள் உறுப்பினர் பதவியினை இலங்கை வீரர் ரங்கன ஹேரத்தும் பெற்றிருக்கின்றார்.

முதல் T20 உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ள தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகில் உருவாகும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மெரில்போன் கிரிக்கெட் கழகத்தினுடைய வாழ்நாள் உறுப்பினர் பதவியானது வழங்கப்பட்டு வரும் நிலையில்,  ரங்கன ஹேரத் இலங்கையில் இருந்து இந்த வாழ்நாள் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் ஜாம்பவானான ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருப்பதோடு, இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் பெற்ற பல வெற்றிகளுக்கு முக்கிய காரணகர்த்தவாகவும் அமைந்திருக்கின்றார்.

இதேநேரம் ரங்கன ஹேரத், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வாழ்நாள் உறுப்புரிமையினைப் பெறும் 15ஆவது இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் T20 உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ள தென்னாபிரிக்கா

அதோடு, 2015ஆம் ஆண்டின் பின்னர் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வாழ்நாள் உறுப்புரிமையினைப் பெற்ற முதல் இலங்கை வீரராகவும் ரங்கன ஹேரத் காணப்படுகின்றார். இதற்கு முன்னர் மெரில்போன் கிரிக்கெட் கழகமானது கடந்த 2015ஆம் ஆண்டில் சமிந்த வாஸ், மஹேல ஜயவர்தன மற்றும் மர்வன் அத்தபத்து ஆகிய வீரர்களுக்கு தமது வாழ்நாள் உறுப்புரிமையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ரங்கன ஹேரத் தவிர தென்னாபிரிக்க அணியின் ஹசிம் அம்லா, மேற்கிந்திய தீவுகளின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப், இந்தியாவின் ஹர்பஜன் சிங், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரர் கிரான்ட் பிளவர் போன்ற வீரர்களும் புதிய உறுப்புரிமை வழங்கப்பட்ட ஏனைய கிரிக்கெட் நட்சத்திரங்களில் முதன்மையானவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<