கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நிறைவிற்கு வந்த ஆறாவது கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட தொடரில் ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டன.
பெண்கள் பிரிவு
அரையிறுதி போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, மருதனார்மடம் ராமநாதன் கல்லூரி அணிகளினை வெற்றிகொண்டிருந்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியினர் இறுதி போட்டியில் மோதியிருந்தனர்.
>>Photos: Rev.Sam Rajasuriar Challenge Trophy 2019 – Finals<<
போட்டியின் முதலாவது காற்பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்து மகளிர் அணியினர் எதிர் அணிக்கு புள்ளிகள் எதனையும் விட்டுக்கொடுக்காது 8 புள்ளிகளை சேகரித்தனர். இரண்டாவது காற்பகுதியிலேயே தமது கணக்கினை ஆரம்பித்திருந்த வேம்படி மகளிர் 07 புள்ளிகளை சேகரிக்க, இந்து மகளிர் 11 புள்ளிகளை சேகரித்திருந்தனர்.
முதல் அரை பகுதி 19-07 என இந்து மகளிர் அணிக்கு சாதகமாக நிறைவிற்கு வர, தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது காற்பகுதியும் 08-06 என இந்து மகளிர்க்கு சாதகமாகவே நிறைவிற்கு வந்தது.
இறுதி காற்பகுதியில் பலத்த போராடத்தினை வெளிப்படுத்திய வேம்படி அணியினர் வெறுமனே 04 புள்ளிகளை மாத்திரம் விட்டுக்கொடுத்து 13 புள்ளிகளை சேகரித்திருந்தனர். எனினும், போட்டி 31-26 என இந்து மகளிருக்கு சாதகமாக நிறைவிற்கு வர வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கினர் யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியினர்.
விருதுகள்
- சிறந்த தாக்குதல் வீராங்கனை – ஜனனி (வேம்படி மகளிர்)
- சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை – பிரியதர்சினி (யாழ் இந்து மகளிர்)
ஆண்கள் பிரிவு
அரையிறுதி போட்டியில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி புனித பத்திரிசியார் கல்லூரி அணியையும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரி அணியினையும் வெற்றிபெற்று இறுதி மோதலில் இடம் பிடித்திருந்தனர்.
>>Photos: 6th Heerthigan Memorial Basketball Tournament 2019 | Finals<<
போட்டியின் முதலாவது காற்பகுதியிலேயே அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய விபூஷன் 11 புள்ளிகளை சேகரிக்க கொக்குவில் இந்து அணி 17 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 7 புள்ளிகளையே பெற்றுக்கொண்டது.
இரண்டாவது காற்பகுதியில் மீண்டெழுந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை கொக்குவில் அணியினர் இந்துவினை விட ஒரு புள்ளி அதிகமாக 8 புள்ளிகளை சேகரித்தனர். இருந்தும் முதலாவது அரைப்பகுதி 24-15 என்ற புள்ளிகணக்கில் கொக்குவில் தரப்பிற்கு சாதகமாக நிறைவு பெற்றது.
மேலும் விறுவிறுப்படைந்த போட்டியின் மூன்றாவது காற்பகுதியில் இரு அணியினரும் 14 புள்ளிகளை சேகரித்துக் கொண்டனர்.
இறுதி காற்பகுதியில் சுதாகரித்துக்கொண்ட கொக்குவில் அணியினர் 18 புள்ளிகளை சேகரித்தனர். மறுபக்கம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை 14 புள்ளிகளை மட்டுமே சேகரிக்க போட்டியானது 56-43 என கொக்குவில் இந்து அணியின் ஆதிக்கத்தில் நிறைவிற்கு வந்தது.
விருதுகள்
- சிறந்த தாக்குதல் வீரர் – திலக்சன் (ஏஞ்சல் சர்வதேச பாடசாலை)
- சிறந்த தடுப்பாடட வீரர் – விபூஷன் (கொக்குவில் இந்து கல்லூரி)
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<