வரலாற்று வெற்றியை தவறவிட்ட இலங்கை ரக்பி அணி

304

மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற  6ஆவது பொதுநலவாய நாடுகளின் இளையோர் விளையாட்டு விழாவில், இதுவரை இலங்கை கனிஷ்ட ரக்பி அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும் குறித்த மூன்று போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் மயிரிழையில் தோல்வியை தழுவினர்.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் 28 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

எதிர்வரும் 23ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ்…

பஹாமாசில் நேற்று ஆரம்பமான 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்காக இந்த போட்டிகள் யாவும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள.     இதில் அணிக்கு எழுவர் கொண்ட றக்பி, மெய்வல்லுனர், நீச்சல், குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் ஜுடோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக 28 வீர வீராங்கனைகள் பங்கு கொண்டுள்ளனர்.

இதில், முதல் நாளில் இலங்கை ரக்பி அணி மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தன.

இலங்கை 15 19 கனடா  

நேற்றைய தினம் முதலாவது போட்டியாக நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் கனடா கனிஷ்ட அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான முதலாவது ரக்பி போட்டியில், 13வது நிமிடம் வரை  15 12 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை வகித்த போதிலும், இறுதி நிமிடத்தில் அணித் தலைவர் கெமுனு சேத்திய தலைமையிலான இலங்கை அணியினரது வரலாற்று வெற்றியின் கனவுகளை கனடா அணி தகர்த்தெறிந்தது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் இலங்கை கனிஷ்ட அணிக்கு பாதகமாக வழங்கப்பட்ட மஞ்சள் அட்டைகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இறுதி நிமிடங்களின் போது இலங்கை கனிஷ்ட அணியின் இரு வீரர்களுக்கு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கனடா அணி இறுதி நேரத்தில் வெற்றி வாகை சூடியது. அதேநேரம், மூன்று ட்ரைகளை பெற்றுக்கொண்ட இலங்கை கனிஷ்ட ரக்பி அணி, அதனை கன்வெர்சனாக மாற்ற தவறியமையும் தோல்வியுறுவதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

இலங்கை  07 14 பீஜி 

பிஜீ அணிக்கெதிரான போட்டியில் முதல் பாதி நேரத்தில் பீஜி கனிஷ்ட அணி  07 00 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும் இரண்டாம் பாதியில் இலங்கை அணி குறித்த புள்ளிகளை சமநிலைப்படுத்தியிருந்தது. பின்னர் மீண்டும் இறுதி நிமிடத்தில் மேலுமொரு ட்ரையையும் அதற்கான கன்வெர்சனையும் நிறைவு செய்ததால் பீஜி வெற்றியீட்டிக்கொண்டது. 

எழுவர் கொண்ட ரக்பி போட்டிகளில் உலக மட்டத்தில் சிறந்த அணியாக திகழும் பீஜி, பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கின் மூத்தவர்களுக்கான ரக்பி போட்டிகளில், முதல் தடவையாக தங்க பதக்கத்தினை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுப்பர் செவன்ஸ் றக்பி தொடரின் சம்பியன் கிண்ணம் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு

பிரமாண்டமான முறையில் இடம்பெற்று நிறைவடைந்த ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ்..

அந்த வகையில், இந்த தொடரில் பீஜி கனிஷ்ட அணி எதிர்கொண்ட முதலாவது   போட்டியான பஹாமாசுடனான மோதலில் 59 00 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபாரமாக வெற்றியீட்டியும், இலங்கை அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் மயிரிழையிலான வெற்றியையும், இறுதியாக நடைபெற்ற கனடா அணியுடனான போட்டியில் எதிர்பாராத வகையில் தோல்வியையும் தழுவியிருந்தது.

இலங்கை 14 36 சமோவா

இந்தப் போட்டித் தொடரில் சிறந்ததொரு அணியாகக் கணிக்கப்படும் சமோவா அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியில் 19 07 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்த நிலையில், இலங்கை அணியினரை எதிர்கொண்டிருந்தது. முதல் பாதி நேரத்தில் 14 – 07 என முன்னிலை பெற்றிருந்த அவ்வணி போட்டியின் நிறைவின் போது 36 – 14 என்ற புள்ளிகளை பெற்று வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த போட்டியில் புனித பேதுரு கல்லூரியை சேர்ந்த ரவின் பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவரான புனித ஜொசப் கல்லூரியை சேர்ந்த கெமுனு சேத்திய ஆகியோர் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் நாளான இன்று பஹாமாஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளை இலங்கை கனிஷ்ட அணி எதிர்கொள்ளவுள்ளது.

போட்டிகளின் மொத்த முடிவுகள்

  • பிஜி 59 – 00 பஹாமாஸ்
  • இங்கிலாந்து 07 – 19 சமோவா
  • கனடா 19 – 17 இலங்கை
  • பிஜி 14 – 07 இலங்கை
  • இங்கிலாந்து 26 – 10 கனடா
  • சமோவா 59 – 05 பஹாமாஸ்
  • பிஜி 19 – 21 கனடா
  • இங்கிலாந்து 72 – 00 பஹாமாஸ்
  • சமோவா 36 – 14 இலங்கை