பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹெட், மார்ஷ் நீக்கம்

Pakistan Tour of Australia 2024

111
Pakistan Tour Of Australia 2024

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அந்த அணியின் முன்னணி வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்க அந்நாட்டு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.   

பாகிஸ்தான் அணி தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது, நாளை இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது 

இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரானது நவம்பர் 14ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது 

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தலைவராகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹெசில்வுட் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் 

இதுதவிர நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், கிளென் மெக்ஸ்வெல் ஆகியோருடன் இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கென்னொளி ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜோஷ் இங்கிலிஷ், மெத்யூ ஷோர்ட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸாம்பா, ஆரோன் ஹார்டி உள்ளிட்டோரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், மிட்செல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது 

இவர்களில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவருக்கும் விரைவில் தந்தையாகவுள்ளதாகல் அணியில் இருந்து விடுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முதுகுவலி முறிவு காரணமாக கெமரூன் கிறீனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை 

அவுஸ்திரேலிய ஒருநாள் அணி விபரம்  

பாட் கம்மின்ஸ் (தலைவர்), சீன் அபோட், கூப்பர் கென்னொளி, ஜேக் ஃப்ரேசர்மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹெசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷேன், கிளென் மெக்ஸ்வெல், மெத்யூ ஷோர்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸாம்பா. 

 அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் அட்டவணை 

நவம்பர் 04- முதல் ஒருநாள் போட்டிமெல்போர்ன் 

நவம்பர் 08 – இரண்டாவது ஒருநாள் போட்டிஅடிலெய்ட் 

நவம்பர் 10 – மூன்றாவது ஒருநாள் போட்டிபெர்த் 

நம்பவர் 14 – முதல் T20I போட்டிபிரிஸ்பேன் 

நவம்பர் 16 – இரண்டாவது T20I போட்டிசிட்னி 

நவம்பர் 18 – மூன்றாவது T20I போட்டிஹோபார்ட் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<