ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களுடன் புதிய உலக சாதனை பதிந்த ஆப்கான் வீரர்

1687
APL

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடரின் போட்டிகள் யாவும் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. ஐந்து அணிகள் பங்குபெறும் இத் தொடரின் நேற்றைய (14) போட்டியொன்றில் பல்க் லெஜென்ட்ஸ் மற்றும் காபுல் ஸ்வானன் அணிகள் மோதியிருந்தன.

ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தி வரும் இசுரு உதான

ஐ.பி.எல். போட்டிகளைப் போன்று ஆப்கானிஸ்தான் …

சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் காபுல் ஸ்வானன் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய் ஒரு ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசி, T20 போட்டிகள் வரலாற்றில் ஓவர் ஒன்றின் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பல்க் லெஜென்ட்ஸ் அணி, முதலில் துடுப்பாடி கிறிஸ் கெயிலின் அதிரடியோடு 20 ஓவர்களுக்கு 245 ஓட்டங்களை காபுல் அணியின் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடும் சவாலான இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய காபுல் அணிக்கு ஆரம்ப வீரர்களாக நியூசிலாந்தின் லூக் ரோன்ச்சியும், ஹஸ்ரத்துல்லாஹ் சஷாயும் களம் வந்தனர்.

மிக மெதுவாகவே, காபுல் அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த போதிலும் குறித்த இன்னிங்ஸின் 4ஆவது ஓவரில் விஸ்ரூபம் எடுத்தார் ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய். இதனால், பல்க் லெஜென்ட்ஸ் அணியின் சுழல் வீரர்களில் ஒருவரான அப்துல்லாஹ் மஷாரி வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரின் ஆறு பந்துகளும் வெவ்வேறு திசைகளில் ஆறு ஓட்டங்களாக மாறின.

இதேநேரம், ஹஸ்ரத்துல்லாஹ்விற்கு ஆறு சிக்ஸர்கள் விளாசும் விதமாக பந்துவீசிய அப்துல்லாஹ் மஷாரி ஒரு வைட் (Wide) பந்தினையும் வீசி 37 ஓட்டங்களை வெறும் ஒரு ஓவரில் வாரி இறைத்திருந்தார்.

லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

சனிக்கிழமை (13) தம்புள்ளையில் நடைபெற்ற …

ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் பெற்றது மட்டுமில்லாமல், வெறும் 12 பந்துகளில் அரைச்சதம் விளாசி T20 போட்டிகள் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் கடந்த வீரர் என்கிற சாதனையினையும் கிறிஸ் கெயில், யுவராஜ் சிங் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், வெறும் 17 பந்துகளுக்கு 62 ஓட்டங்களை குவித்திருந்தவாறு ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய்யின் விக்கெட் பென் லோக்லினின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டது. ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய் ஆட்டமிழக்கும் போது மொத்தமாக 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் என்பவற்றை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய் அதிரடியான ஆட்டத்தை காண்பித்திருந்த போதிலும், குறித்த போட்டியில் அவரது காபுல் ஸ்வானன் அணி பல்க் லெஜென்ட்ஸ் அணியிடம் துரதிஷ்டவசமாக 21 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.  

இலங்கை இளம் அணியில் சமாஸ், வியாஸ்காந்த் இணைப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் …

போட்டியின் பின்னர் பேசிய ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய், “இது எனக்கு பெருமையான தருணமாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் உண்மையான நாயகர்களான பெரும் அடையாள வீரர்களின் பெயருடன், எனது பெயரும் இப்போது (சாதனை ஒன்றுக்காக) இணைவது மிகவும் சந்தோசமான ஒன்று. எனக்கு 12 பந்துகளில் அரைச்சதம் விளாச உதவியாக இருந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி” என்றார்.

அதேவேளை, மேலும் பேசிய ஹஸ்ரத்துல்லாஹ் ஷசாய் குறித்த போட்டியில் தனக்கு முன்மாதிரியாக இருக்கும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெயிலின் அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசியது மகிழ்ச்சியாக உள்ளது என இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“ எனது முன்மாதிரி நபருக்கு (கிறிஸ் கெயிலுக்கு) முன்னால் இப்படியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஒரு வினோதமான தருணம். நான் யாரை விடவும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. எனக்கு இயற்கையாக எது வருமோ அதையே செய்தேன். “