பங்களாதேஷ் சென்றுள்ள மே.தீவுகள் வீரருக்கு கொவிட்-19 தொற்று!

West Indies tour of Sri Lanka 2021

216
espncricinfo

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹெய்டன் வோல்ஸ் ஜூனியருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்நாளில் பலம் பெற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பங்களாதேஷிற்கு புறப்படுவதற்கு முன்னர் ஹெய்டன் வோல்ஸிற்கு மேற்கொள்ப்பட்ட கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனையில், கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் (13) பங்களாதேஷில் வைத்து மேற்கொள்ளப்பட்ட முதல் பி.சி.ஆர். பரிசோதனையில், இவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

முதற்தடவை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த போதும், அதனை மீண்டும் உறுதிசெய்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலும், ஹெய்டன் வோல்ஸிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர், மேற்கிந்திய தீவுகளிலிருந்து புறப்பட்டதிலிருந்து, ஏனைய எந்த வீரர்களுடனும் தொடர்புக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்தும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் குழாத்தின் ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் அனைவருக்கும் கடந்த 11 நாட்களில் 4 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டித்தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<