சந்திக ஹதுருசிங்கவை பணிநீக்கம் செய்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

66

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது (BCB) பங்களாதேஷ் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவினை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐ.சி.சி. இன் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ்

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக குறிப்பிடப்பட்டு, தற்போது அடுத்த 48 மணிநேரங்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு இந்த பணிநீக்க காலத்தின் பின்னர் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் பணிநீக்கப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

அதேநேரம் சந்திக்க ஹதுருசிங்க இல்லாத நிலையில் 2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரை மேற்கிந்திய தீவுகளின் பில் சிம்மோன்ஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் இரண்டாவது தடவையாக நியமனம் செய்யப்பட்ட சந்திக்க ஹதுருசிங்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிமுறைகளை இரண்டு பிரிவுகளில் மீறியதன் காரணமாகவே தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியான பாரூக்கி அஹ்மட் குறிப்பிட்டுள்ளார் 

இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

ஹதுருசிங்கவின் பயிற்றுவிப்பிலான பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் இந்த ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றில் சுமரான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றி சாதனை வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<