ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

2002

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்களை பெற்ற வீரர் எனும் விராத் கோஹ்லியின் சாதனையை நேற்றைய (19) சதத்தின் மூலம் தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா முறியடித்துள்ளார்.  

தென்னாபிரிக்காவுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருன்றது. முதல் தொடரான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 3-0 எனுமடிப்படையில் பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்பு செய்திருந்தது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது பாகிஸ்தான்அணி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் ….

இந்நிலையில் சுற்றுத்தொடரின் அடுத்த போட்டியான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (19) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, தமது வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இழந்ததற்கு முதல் போட்டியில் பதில் கொடுத்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் ஒருநாள் சர்வதேச அரங்கில் ஹசிம் அம்லா தனது 27ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த 27ஆவது சதத்தின் மூலம் ஹசிம் அம்லா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

27 ஒருநாள் சதங்களை குறைந்த போட்டிகளில் (170) பெற்ற வீரர்கள் வரிசையில் தற்போது நேற்றைய (19) சதத்தின் மூலம் ஹசிம் அம்லா முதலிடத்தில் இருந்த விராத் கோஹ்லியை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் 5ஆவது வீரராக 27 சதங்களை அம்லா பூர்த்தி செய்துள்ளார். இதுவரையில் 5 வீரர்கள் மட்டுமே 27 சதங்களை பூர்த்தி செய்துள்ளனர்.  

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய ஹசிம் அம்லா

தென்னாபிரிக்க அணியின் ஒட்டக் குவிப்பு இயந்திரம் என்னும் சிறப்பு பெயர் மூலம் ….

வேகமாக 27 சதங்களை பூர்த்தி செய்த வீரர்கள்

  1. ஹசிம் அம்லா (தென்னாபிரிக்கா) – 170 போட்டிகள் (167 இன்னிங்ஸ்கள்)
  2. விராத் கோஹ்லி (இந்தியா) – 177 போட்டிகள் (169 இன்னிங்ஸ்கள்)
  3. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 261 போட்டிகள் (254 இன்னிங்ஸ்கள்)
  4. ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா) – 317 போட்டிகள் (308 இன்னிங்ஸ்கள்)
  5. சனத் ஜயசூரிய (இலங்கை) – 416 போட்டிகள் (404 இன்னிங்ஸ்கள்)

ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 26 சதங்கள், குறைந்த இன்னிங்ஸில் 6,000 ஓட்டங்கள் மற்றும் குறைந்த இன்னிங்ஸில் 7,000 ஓட்டங்கள் போன்ற கோஹ்லியின் 3 சாதனைகளை இதற்கு முன்னர் ஹசிம் அம்லா முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு கோஹ்லியின் சாதனையை முறியடிக்கும் 4ஆவது சந்தர்ப்பமாகும்.

170 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹசிம் அம்லா மொத்தமாக 7,804 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்களும், 36 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<