பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஷான் திலகரட்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஹஷான் திலகரட்ன பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது ஒப்பந்த காலம் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த போதிலும், அண்மையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான சுற்றுப்பயணம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹஷான் திலகரட்னவின் இராஜினாமாவை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மகளிர் பிரிவின் தலைவர் ஹபிபுல் பஷார், ‘மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது அவர் இனி எமது அணியுடன் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறியதாக அவர் Cricbuzz.com இணைத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கிரிக்பஸ் அறிக்கையின்படி, ஹஷான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் செயல்திறனில் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் திருப்தி அடையவில்லை. இதன் காரணமாக, அவருடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை உணர்ந்து அவர் தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாகவும், அந்தப் பொறுப்பை உள்ளூர் பயிற்சியாளர் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
- திடீர் ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- U19 உலகக் கிண்ண பெறுமதிக்க அணியில் இலங்கையின் சமோதி
- பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பும் ஃபக்கர் ஜமான்
கடந்த மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் தான் ஹஷான் திலகரட்னவின் கடைசி சுற்றுப்யணமாகும். இந்த சுற்றுப்பயணத்தின் போது, மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், T20I தொடரை 3-0 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி இழந்தது.
இதில் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்;கு ஒருநாள் தொடரை வெல்ல முடிந்தால், எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாட அந்த அணிக்கு நேரடி வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக, தகுதிகாண் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக அந்த அணி விளையாட வேண்டியுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<