இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியினை இராஜினமா செய்திருக்கும் ஹசான் திலகரட்ன, பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றி
தென்னாபிரிக்காவில் நடைபெறும் மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் தனது பதவியினை இராஜினமா செய்தே இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான ஹசான் திலகரட்ன பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை ஏற்றிருக்கின்றார்.
ஹசான் திலகரட்ன ஆளுகையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததோடு, அந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியினைத் தழுவி தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் அடம் ஷம்பாவிற்கு கொவிட்-19 தொற்று
இதேநேரம் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை குழாத்திலும் காணப்பட்ட இவர் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக செயற்பட்டதோடு, லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடர் முதல் பருவத்தில் விளையாடிய கண்டி டஸ்கர்ஸ் அணியை பயிற்றுவித்ததும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<