இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன

1228
Hashan Tillakaratne

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்ன, இந்தியாவுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது 50 வயதாகும் ஹஷான் திலகரட்ன, இலங்கையில் உள்ள வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான விஷேட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவதற்கு கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். எனினும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட் அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஹஷான் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்காகவும் அயராது அர்ப்பணித்து வந்தார்.  

அந்த வகையில், இம்மாதம் இடம்பெற்று முடிவடைந்த ஜிம்பாப்வே அணியுடனான  ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின்போதும் அவர் இலங்கை அணிக்காக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை அணியின் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் சம்பக்க ராமநாயக்கவுக்குப்..

இவரது இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, ”ஹஷானின் அனுபவம் இலங்கை அணிக்கு டெஸ்டில் சிறந்த பயனைப் பெற்றுக்கொடுக்கும். அழுத்தங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் எவ்வாறு சிறந்த முறையில் துடுப்பாடுவது என்பது குறித்த அறிவை வீரர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர். ஹஷான் வீரர்களுக்காக சிறந்த முறையில் செயற்படுகின்றார்” என்றார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக இருந்த சம்பக்க ராமனாயக்க அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அப்பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.