குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் இளம் நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க இந்தப் பருவத்திற்கான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி
வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டுக்கான PSL தொடரின் வீரர்கள் ஏலத்தில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியினால் கொள்முதல் செய்யப்பட்டிருந்தார். கொள்வனவு செய்யப்பட்ட வனிந்து ஹஸரங்க குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக இந்தப் பருவத்தில் ஆறு போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் நிர்வாகம் வனிந்து ஹஸரங்க தொடரில் இருந்து முழுமையாக வெளியேறி இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.
வனிந்து ஹஸரங்க தற்போது இலங்கையின் உள்ளூர் தொடரான தேசிய சுபர் லீக் தொடரில் விளையாடி வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட பணிச்சுமையே பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் விளையாட போகாமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வனிந்து ஹஸரங்க இல்லாத நிலையில் குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி இந்தப் பருவகாலத்திற்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் சுழல்வீரரான கைஸ் அஹ்மட்டிற்கு வாய்ப்பு வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மகளிர் IPL தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக டாடா நிறுவனம்
இதேநேரம் ஜோர்டன் கோக்ஸ் இன் பிரதியீட்டு வீரராக லாஹூர் கலந்தர்ஸ் அணியில் இணைக்கப்பட்ட குசல் மெண்டிஸ் உம், இலங்கை கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான் சுபர் லீக்கில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குசல் மெண்டிஸ் விலகிய நிலையில் லாஹூர் கலந்தர்ஸ் அணி அவரின் பிரதியீட்டு வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப்பிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<