இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகும் ஹசன் அலி

158
Hasan Ali
PHOTO - AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹசன் அலி, இலங்கை அணியுடன் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சங்கீத் குரேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்படி, திமுத் கருணாரத்னவுடன்

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ஹசன் அலி விலக அவர் எலும்பு உபாதை ஒன்றினை எதிர்கொண்டமையே காரணமாகும். ஹசன் அலி, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆடி வந்த நிலையிலையே குறித்த உபாதையினை எதிர் கொண்டிருக்கின்றார். 

அதேநேரம் ஹசன் அலிக்கு ஏற்பட்டிருக்கும் உபாதை குணமாவதற்கு இன்னும் ஆறு வாரங்கள் தேவைப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்திருக்கின்றது. 

கடைசியாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியிருந்த ஹசன் அலி, குறித்த தொடரில் 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக திறமையினை வெளிப்படுத்தக்கூடிய வீரர் ஒருவர் பாகிஸ்தான் அணியில் இல்லாமல் போவது பாரிய இழப்பாக கருதப்படுகின்றது.

ஹசன் அலி இல்லாத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அவர்களது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்ட இணைப்பை இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க