பாகிஸ்தான் T20I குழாத்தில் இடம்பிடித்த ஹஸன் அலி!

Sri Lanka Cricket

172

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 7 T20I போட்டிகளுக்கான 18 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சு சகலதுறை சல்மான் அலி ஆகா முதன்முறையாக T20I குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ள வசீம் அக்ரம்!

அதேநேரம் உபாதை காரணமாக நியூசிலாந்து தொடரை தவறவிட்ட ஹரிஸ் ரவூப் மற்றும் அஷாம் கான் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் உசமா மிர் மற்றும் ஷமான் கான் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்திருந்த அனுபவ வீரர்களான மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் அணித்தலைவராக பாபர் அஷாம், அப்ரார் அஹமட், இப்திகார் அஹ்மட், மொஹமட் ரிஸ்வான், சதாப் கான், சஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 18 பேர்கொண்ட குழாத்திலிருந்து T20 உலகக்கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி தெரிவுசெய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர்

முதலில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி எதிர்வரும் 7ம் திகதி டப்லின் நோக்கி புறப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் குழாம்

பாபர் அஷாம் (தலைவர்), அப்ரார் அஹ்மட், அஷாம் கான், பக்ஹர் ஷமான், ஹரிஸ் ரவூப், ஹஸன் அலி, இப்திகார் அஹ்மட், இமாட் வசீம், மொஹமட் அபாஸ் அப்ரிடி, மொஹமட் ஆமிர், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் இர்பான் கான், நசீம் ஷா, சயீம் ஆயுப், சல்மான் அலி ஆகா, சதாப் கான், சஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<