2025 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் ஹர்ரி புரூக்

IPL 2025 

5

2025ஆம் ஆண்டின் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஹர்ரி புரூக் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

52 வருடங்களின் பின்னர் வெற்றியினை பதிவு செய்த யாழ்ப்பாணக் கல்லூரி

ஹர்ரி புரூக் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணிக்கான தனது கடமைகளைக் கருத்திற் கொண்டே புதிய பருவத்திற்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

ஹர்ரி புரூக் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணி மூலம் இந்திய நாணயப்படி 6.25 கோடி ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே அவர் தொடரில் இருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  

மறுமுனையில் ஹர்ரி புரூக் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதன் காரணமாக, தொடரின் விதிமுறைகளை கருத்திற் கொள்ளாத தடை பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.  

ஹர்ரி புரூக் கடந்த பருவத்திற்கான (2023) ஐ.பி.எல். தொடரிலும் டெல்லி கெபிடல்ஸ் அணி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொடரில் பங்கேற்காமல் போயிருந்த நிகழ்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<