இங்கிலாந்து அணியின் புதிய தலைவராகும் ஹெரி புரூக்!

England Cricket

32
Brook

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஹெரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணத்தின் போது தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியிலிருந்து ஜோஸ் பட்லர் விலகினார்.

>>முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் மொஹமட் சமாஸ்<<

இந்தநிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உப தலைவராக செயற்பட்டுவந்த ஹெரி புரூக் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெரி புரூக் இங்கிலாந்து அணியின் தற்காலிக தலைவராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் செயற்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் ஜோஸ் பட்லர் விளையாடாத காரணத்தால் புரூக் தலைவராக செயற்பட்டிருந்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<