பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஹரூன் ரஷீட் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் ஹரூன் ரஷீட் நியமிக்கப்பட்டுள்ள போதும், தேர்வுக்குழு அங்கத்தவர்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>> ஐசிசியின் சிறந்த T20I அணியில் வனிந்து ஹஸரங்க!
மொஹமட் வசீம் பாகிஸ்தாான் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவராக செயற்பட்டுவந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு இடைக்கால தேர்வுக்குழு தலைவராக சஹீட் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது புதிய தேர்வுக்குழு தலைவராக ஹரூன் ரஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரூன் ரஷீட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக ஏற்கனவே செயற்பட்டுள்ளார். கடந்த 2015ம் மற்றும் 2016ம் ஆண்டுகளில் இவர் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 14 அங்கத்தவர்கள் அடங்கிய முகாமைத்துவ குழாத்திலும் இவர் பங்கு வகித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 67 வயதான ஹரூன் ரஷீட், டெஸ்ட் போட்டிகளில் 1217 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<