இந்திய மகளிர் அணியின் தலைவி ஹர்மன்பிரீட் கவுரிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது.
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் நடுவரின் தீர்ப்பை போட்டியின் பின்னர் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்வின் போது விமர்சித்தமை போன்ற குற்றங்களுக்காக இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் மழையின் குறுக்கீடு
மிர்பூரில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில் இரண்டு அணிகளும் 225 ஓட்டங்களை பெற்று போட்டியை சமனிலைப்படுத்தியிருந்த நிலையில், தொடர் 1-1 என சமனிலையில் முடிவடைந்திருந்தது.
குறித்த இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஹர்மன்பிரீட் கவுர் தனது ஆட்டமிழப்பை ஏற்காது தன்னுடைய துடுப்பாட்ட மட்டையால் ஸ்டம்பினை தாக்கியதுடன், நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு களத்திலிருந்து வெளியேறினார்.
குறித்த இந்த தவறுக்காக ஹர்மன்பிரீட் கவுரிற்கு 3 தரமிறக்க புள்ளிகள் மற்றும் போட்டிக்கட்டணத்தில் 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குறித்த நடுவரின் தீர்ப்பை போட்டியின் பின்னர் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்வில் விமர்சித்த நிலையில், மேலும் ஒரு தரமிறக்கல் புள்ளி மற்றும் 25 சதவீதம் போட்டிக் கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்பட்டது.
எனவே மொத்தமாக 4 தரமிறக்கல் புள்ளிகளை ஹர்மன்பிரீட் கவுர் பெற்றுள்ள நிலையில், குறித்த புள்ளிகள் இரண்டு இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டன. அதன்காரணமாக அடுத்துவரும் ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் அல்லது 2 T20I போட்டிகளில் விளையாடுவதற்கு ஹர்மன்பிரீட் கவுரிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த தடையின் காரணமாக ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலிரண்டு போட்டிகளை ஹர்மன்பிரீட் கவுர் தவறவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<